Sunday, December 26, 2010

உ.ராமசாமி நாடாருக்கு விருந்து

உ.ராமசாமி நாடாருக்கு விருந்து
குடியரசு 8.10.1940)

பல அன்பர்கள் உபசாரம்
சமீபத்தில் காலனி அரசாங்கத்தாரால் சமாதான நீதிபதி பட்டம் வழங்கப்பட்ட சிங்கப்பூர் தமிழ்ப் பிரமுகர் தோழர் உ. ராமசாமி நாடார் அவர்களுக்கு சிங்கப்பூர் தமிழ் சமூகத்தினர் 5.9.40 வியாழக்கிழமை மாலை 6 மணிக்க அடல்பி ஹோட்டலில் ஒரு தேநீர் விருந்துபசரிப்பு நடத்தி உபசாரப் பத்திரம் வாசித்தளித்தனர்.

இவ்விருந்துபசரிப்பிற்கு காலனி ஆக்டிங் கலோனியல் செக்ரட்டரி, ஆக்டிங் சீப் ஜஸ்டிஸ், இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலிஸ், முனிசிபல் தலைவர் உள்ளிட்ட அரசாங்க இலாகாக்களின் தலைவர்குளம், முக்கியஸ்தர்களும், நகரப் பிரமுகர்களான ஐரோப்பியர், சீனர், இந்தியர், மலாயக்காரர், அரபிக்காரர் முதலானவர்களும் ஆண்களும் பெண்களுமாய் ஏறக்குறைய 400 பேர்கள் விஜயம் செய்திருந்தனர்.

தேநீர் அருந்திய பின்னர் ஆக்டிங் கலோனியல் செக்ரட்டரி மிஸ்டர் வீஸ்பர்க் அவர்களுக்கு தோழர் பா. கோவிந்தசாமி ஜே.பி. அவர்களாலும், தோழர் உ. ராமசாமி நாடார் அவர்களுக்கு தோழர் அ.சி.சுப்பையா அவர்களாலும் ஜரிகை மாலைகள் அணிவிக்கப்பட்டன. திருவாட்டி நாடார் அவர்களுக்கு மிஸ். லக்சியால் பூக்கூடை வழங்கப்பட்டது.

தோழர் ஈ.வி. டேவிஸ் அவர்கள் தோழர் உ. ராமசாமி நாடார் அவர்களை அறிமுகப் படுத்தி வைக்கும் போது பேசியதாவது:-
தமிழ்ச் சமூகத்தினர்களால் அதிகமாகப்போற்றப்படும் தமிழ் பிரமுகர் ஒருவர் சமாதான நீதிபதியாய் நியமிக்கப் பட்டது குறித்து கெளரவிப்பதற்காக அழைக்கப்பட்ட அழைப்பின் மீது நீங்கள் விஜயம் செய்திருக்கிறீர்கள். தோழர் உ. ராமசாமி நாடார் அவர்களை அவருடைய சமூகத்தாருக்கு அறிமுகப்படுத்தத் தேவையில்லை. அவர் இந் நகரத்தின் பழமையான குடும்பஸ்தர். நிதானமான வெற்றிகரமான வியாபார முயற்சியால் அவர் செழிப்பான ஒரு வர்த்தகத்தை ஸ்தாபித்துக் கொண்டவர். அவருடைய சமூகத்தினுள் அவர் ஒரு பெரிய வர்த்தகர். ரொம்ப அடக்கமும் ஒடுக்கமும் ஒதுங்கி நிற்கும் குணங்களும் வாய்க்கப் பெற்றவராய் அவர் இருந்தாலும் அவர் வர்த்தகத்துறையில் தலை சிறந்து விளங்குகிறார் என்பதற்காக மட்டில்லாது அவர் தம்முடைய சமூக நன்மைக்கான காரியங்களில் எப்போதும் தளர்வுறாத முயற்சி எடுத்துக் கொள்வதாலும் காலனி அரசாங்கம் யுத்தத்திற்காக பணம் திரட்டும் முயற்சியில் தீவிரமான பங்கெடுத்தும் தாமே காரியாம்சத்தில் நிரூபித்தும் தம் சமூகத்தினரிடையே அதிக எழுச்சியை உண்டு பண்ணியதாலும் அவர் வெகு கண்யமாக மதிக்கப்பட்டு வருகிறார். தாராளமாய் பணம் வழங்கம்படி தம் சமூக மக்களிடம் முதல் முதல் விண்ணப்பம் செய்து கொண்டவருள் இவரும் ஒருவர். ஒரு பெரிய நன்கொடையோடு கூடவே இந்த விண்ணப்பத்தை இவர் விடுத்தார். இதைத் தொடர்ந்து பல நன்கொடைகள் வருமென்று நான் நிச்சயமாய் கூறுவேன். யுத்த ஆரம்பந் தொட்டு பணந்திரட்டுவதில் இவர் கொஞ்சமும் அயராது வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்த யுத்த நிதிக்குத் தேவை இருக்குமளவும் இவ்வேலையை இவர் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார் (கை தட்டல்).

இந்த நேரத்தில் இம்மாதிரியான ஒரு உபசரிப்பை நடத்துவதற்கு ஒருக்கால் நான் நியாயங்கூற வேண்டியதாய் இருக்கலாம்.தற்போதைய சஞ்சலமான நிலைமையை உத்தேசித்து தோழர் நாடார் அவர்கள் தமது உதார குணங்களுக்கேற்ப தம்மை கெளரவிப்பதற்காக தமக்கு உபசாரம் நடத்த விரும்பியவர்களிடம் அந்த உபசரிப்புகளுக்குச் செலவாகக் கூடிய தொகைகளை யுத்த நிதிகளுக்கு வழங்கும்படிக் கோரினார். இவற்றுள் சிலவற்றை தமது வர்த்தகச் சாதுர்யப்படி ஒப்புக்கொண்டு, இந்த உபசரிப்புகளை யுத்த நிதிக்குப் பணந்திரட்டும் நற்காரியத்திற்கு வெற்றிகரமாய் பயன்படுத்திக் கொண்டார். இந்த நோக்கங் கொண்டே யுத்தநிதிக்கு பணந் தரும்படியும், அதுவும் தாராளமாய் வழங்க வேண்டியதை வற்புறுத்திக் காட்டவும் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தைப் பெறுவதற்காகவே இதையும் ஒருக்கால் ஒப்புக் கொண்டிருக்கலாம்.
நான் இப்போது நாடார் அவர்களுக்கு தமிழ்ச் சமூகத்தினர் வழங்கும் உபசாரப் பத்திரத்தை வாசிக்கிறேன். (இப்பத்திரம் கீழே தரப்படுகிறது)

தோழர் நாடார் அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டத்திற்கு உங்கள் சார்பில் நான் பாராட்டுகிறேன். இந்தக் கெளரவப் பட்டத்தின் உயரிய தன்மைகளை அவர் கண்யமாகப் பேணுவார் என்று நான் எடுத்துச் சொல்ல தேவையில்லை.
தோழர் உ.ராமசாமி நாடார் அவர்களுக்கு சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தினர் உவந்தளித்த உபசாரப் பத்திரம் :

அன்பீர்!
தாங்கள் சிங்கப்பூர் செட்டில் மெண்டிற்கு ஒரு சமாதான நீதிபதியாய் நியமனம் பெற்றமைக்கு எங்களது உள்ளன்பான உவப்பை இந்த உபசரிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்ள சந்தோசப்படுகிறோம்.
சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்து, சமூக நலன்களின் பொருட்டு தாங்கள் செய்து வரும் பல காரியங்களையும் பார்த்து இந்த தகுதிவாய்ந்த பட்டத்தை தங்களுக்கு வழங்கியதற்கும் எதிர்காலத்தில் தங்களுக்கு இன்னும் அதிக சந்தோசந் தரக்வடிய பட்டங்களுக்கு இது முதற்படியாக இருப்பதற்கும் அரசாங்கத்திற்கு இச் சந்தர்ப்பத்தில் எங்களது வந்தனங்களையும் தெரிவிதது கொள்கிறோம்.

மலாயா தேசபக்த நிதிக்கு பொருள் வழங்கிய இந்தியர் பட்டியலில் தாங்கள் முதலாவதாக நின்று வழிகாட்டியதும், அந்த நிதிக்கு சிங்கப்பூர் இந்தியர்களை யயல்லாம் தாராளமாய் பணம் வழங்கும்படி செய்ததும், அதற்கான ஏற்பாடுகளைச செய்வதற்கப் பெரும் பிரயாசை எடுத்துக் கொண்டதும், பிரிட்டிஷ் அரசாங்கத்தினிடம் தனக்குள்ள பாரம்பரிச ராஜ விசுவாசத் தன்மையை இந்திய சமூகம் நிலை நிறுத்திக் கொள்ள உதவின. மேலும் இதுவரை நம் சமூகத்திடை நடந்துள்ள யுத்த நிதி பண வசூலிப்பு மிகவும் சந்தோசகரமாய்க் காணப்படுவதிலும் தங்களுடைய தலைமை சிங்கப்பூர் இந்தியர்களிடை மட்டில்லாது மலாயா நாட்டு இந்தியர்களிடையே சந்தேகமற்ற தனிச்சிறப்பு பெற்றிலங்ககிறது.

தாங்கள் செய்து வரும் சமூகச் சேவையின் தன்மையும் தங்களுடைய எண்ணற்ற உதார ஈகையின் சிறப்பும் தங்களிடம் இன்னும் அதிகமாகவே நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்படித் தூண்டுகோல் செய்யும் அவ்வளவு அதிகப்பட்டதாயும் அவ்வளவு அடுத்தடுத்ததாயும் இருக்கின்றன. ஆதலால் தமிழ்ச்சமூகத்தின் நன்மைக்குரித்தானதாகவும் தங்களுடைய பெயர் விளங்கி ஒளிர ஒரு நிரந்தர நிலையத்திற்கேற்ற வகையில் ஒரு சன்மானத்தை தாங்கள் மகிழ்வோடு வழங்குவீர்கள் என நாங்கள் நம்ப இடமேற்படுகிறது.

மலாயா வாழும் இந்திய சமூகத்தில் முதன்மையாளராகவும், வழி கோலிகளாகவும் இருக்கும் தமிழ்ச்சமூகத்தின் முற்போக்கு தங்களுடைய மேலான தலைமையில் சுபீட்சமான எதிர்காலத்தை அடையக் கூடியதாய் இருப்பதோடு வட, இந்த நாட்டிற்குச் சம்பந்தபட்ட எல்லா காரியங்களிலும் தமிழ் சமூகம் அதிப்படியான பங்கிற்குத் தகுதியான வெற்றியை தனக்குத் தானாகவே அடையும்.

இதை எங்களுடைய அடக்கமான வெகுமானமாக சந்தோசமாய் வழங்குவதோடு தங்கள் மீதும், தங்கள் குடும்பத்தினர் மீதும் ஆண்டவன் இன்னம் அருள் கிருபைகளைப் பொழிய வேண்டுமெனவும் இறைஞ்சுகிறோம்.

ஆங்கிலத்திலிருந்த உபசாரப் பத்திரத்தை தோழர் ஈ.வி.டேவிஸ் அவர்களும் தமிழிலிருந்த உபசாரப் பத்திரத்தை தோழர் ஆத.கு.பள.மெ. மெய்யப்பச் செட்டியார் அவர்களும் வாசித்து வெள்ளிப் பேழையில் வைத்து தோழர் ஈ.வி.டேவிஸ் அவர்களால் தோழர் நாடார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த உபசரிப்பிற்குப் பதிலளிக்கையில் தோழர் நாடார் அவர்கள் கூறியதாவது:-
யுத்த செய்திகளில் எல்லோரும் அதிக கவனம் செலுத்தும் இந்த சமயத்தில் எனக்குச் செய்த இந்த கெளரவத்திற்கு நான் மிகவும் நன்றியறிதல் உடையவனாய் இருக்கிறேன். உலக விடுதலைகாண இந்த யுத்தம், நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பது போல் இப்போது பிரிட்டிஷ் கால்வாயில் நடத்தப்பட்டு வருகிறது. ஹிட்லர் கொள்ளை ஒழியும் வரையில் இந்த யுத்தம் நடைபெறும். இந்த யுத்தத்தை வெல்வதுதான் இப்போதய முக்கிய பிரச்சனை. இவ் வெற்றி கைவரப் பெற்றால் மற்றெல்லா காரியங்களும் தானாகவே ஒரு நிலைப்பட்டு விடும். ஆதலால் எந்த சமூகம், எந்த மதம், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாய் இருப்பினும் சி, ஆணாயினும், பெண்ணாயினும் சரி, இந்த யுத்தத்தை வெல்லக் கூடிய மகத்தான முயற்சிகளுக்கு அவசியமான அவசரத் தேவைகளை நன்றாய் உணர வேண்டியது நமது கடமை. திங்கட் கிழமை தினம் ஒலிபரப்பில் நமது மேன்மைதங்கிய கவர்னர் அவர்கள் பேசிய போது மலேயா வழங்கும் யுத்தக் கடன் நன்கொடையானது நாம் இந்த யுத்தத்தில் நமது உள்ளமும் உயிரும் ஒன்று சேர்ந்து உதவும் என்பதின் அடையாளம் என்று கூறியுள்ளார். உலக சமாதானத்தை இப்போது பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஹிட்லர் கொள்கையையும், நாஜி இயக்கத்தையும் ஆழப்புதைக்க மன்னர் பிரான் அரசாங்கத்திற்கு வேண்டிய உதவிகளை ஒரு வழியில் மட்டுந்தான் என்றில்லாது பல வழிகளிலும் மலேயா தனது பங்கைச் செய்யும் என்ற உறுதி எனக்கு உண்டு. எனது சமூகமான தமிழ்ச்சமூகம் உங்களுடன் தோளோடு தோள் நின்று தொண்டாற்ற ஒரு அணுவும் பின்னçடாது என நான் உறுதியாகவும் சொல்லக் கூடும். ஏனெனில் உதவி செய்வதே தமிழர் தத்துவம். (கை தட்டல்). நம் மன்னர் பிரான் அரசாங்கம் இந்த யுத்தத்தில் வெற்றி பெற மன மொழி மெய்யால் கடவுளை பிரார்த்திபபோமாக. இதோடு உங்கள் எல்லோருடைய அன்பிற்கும், அபிமானத்திற்கும் என் மனப்பூர்வமான வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

விருந்தினர்களின் சார்பில் ஆக்டிங்கலோனியல் செக்ரெடிரி ஹானரபிள் மிஸ்டர் எச். வீஸ்பர்க் அவர்கள் பேசியதாவது:-
பட்டத்தை அங்கீகரித்து கெளரவிக்கும் இம்மாதிரியான உபசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள சந்தோசப்படுகிறேன். தோழர் ராமசாமி நாடார் அவர்கள் முப்பது வருடமாய் இந்நாட்டில் வசிப்பவர். இந்தியர்களுள் ஒரு முக்கியஸ்தர்.
யுத்த நிதிக்கு பத்தாயிரம் வெள்ளி வழங்கி யிருக்கிறார். தென்னிந்தியர் பகுதியின் தலைவராய் இருந்து மலாயா தேச பக்த நிதிக்குப்பணம் வசூலித்துக் கொடுத்திருக்கிறார்.
இப்பொழுதும் யுத்த நிதிக்குப் பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார். இந்தியர்களின் ராஜ விஸ்வாசத்தை இவை புலப்படுத்துகின்றன. மன்னர்பிரான் அராங்கம் வெற்றி பெறும் வரை யுத்தம் செய்வதற்கு உதவியாய் காலனி யுத்தக்கடன் பத்திரங்கள் ஏற்பட்டள்ளதை தாராளமாய் வாங்கி ஆதரிப்பது எல்லோருடைய கடமை.
இநதிய சமூகம் யுத்த நன்கொடைகளுக்கு தாராளமாய் வழங்கியிருப்பது போல் இந்த யுத்தக் கடனையும் ஆதரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தோழர் நாடார் அவர்கள் இன்னும் ஒரு ஆயிரம் வெள்ளி இப்போது யுத்த நிதிக்கு வழங்குகிறார். தோழர் நாடார் அவர்களுக்கும் உங்கள் எல்லோருக்கும் என் வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசியாய் ராஜ வாழ்த்து அடல்பி ஹோட்டல் பேண்டு வாத்தியக்காரர்களால் வாசிக்கப்பட்டு கூட்டம் கலைந்தது. விருந்தினர்கள் பலர்தோழர் நாடார வர்களுக்கு வாழ்த்து கூறிச் சென்றனர்.

உ.ராமசாமி நாடாருக்கு பாராட்டுக் கூட்டம்

உ.ராமசாமி நாடாருக்கு பாராட்டுக் கூட்டம்

சிங்கப்பூர் தமிழர் செல்வர் தோழர் உ. ராமசாமி நாடார் அவர்களுக்கு அரசாங்கத்தார் சமாதான நீதிபதி பட்டம் வழங்கியதைப் பாராட்டும் பொருட்டு தோழர் நாடாரவர்களின் தோழரான தோழர் பி. இரத்தினம் அவர்களால் நேற்று இரவு தமது துல்லக்வரோ பங்களாவில் நடத்திய பெரும்விருந்திற்கு இவ்வூரின்கண் வதியும் எல்லா சமூகப் பிரமுகர்களும் சுமார் 500பேர்கள் வரை விஜயம் செய்திருந்தனர். இவர்களைக் களிப்பிக்க ஒருபுறம் மலாய்ப் பெண்களின் ரோங்கினும் மற்றோர்புறம் இளைஞர்களின் சங்கீதமும் நடைபெற்றன. பிரதம விருந்திற்குரிய சாப்பாட்டு மண்டபம் அழகிய கொடிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஆகாரங்களும் பானங்களும் பரிமாறப்பட்டு விருந்துண்ட பின்னர் தோழர் இரத்தினம் அவர்கள் தோழர் நாடார் அவர்களுக்கு அழகிய புஷ்பமாலை அணிவித்தார். இவ்வூர் சட்டசபை அங்கத்தினரும் பிரபல லாயருமான தோழர் டசில்வா அவர்களுக்கும் மாலை அணிவித்து தமது சார்பில் தோழர் நாடார் அவர்களுக்கு உபசாரம் கூறும்படிக் கேட்டுக் கொண்டார். அவ்வாரே தோழர் டிசில்வா அவர்கள் பேசிய தன் சுருக்கமாவது:-

தமது சார்பில் தோழர் நாடார் அவர்களுக்கு உபசாரம் கூறும்படி எனது நண்பர் தோழர் இரத்தினம் கேட்டுக் கொண்டார். தோழர் நாடார் அவர்களை அவரின் சமூகத்தாரின்றி பிற சமூகத்தினரும் நன்கு அறிவர். என் இளமை முதலே தோழர் நாடாரின் கீர்த்தியையும், செல்வாக்கையும் அறிவேன். நான் லாயர் தொழில் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவரின் புகழ் நன்றாய் பரவியிருந்தது. தோழர் இரத்தினம் அவர்களின் குடும்பத்தினரும் தோழர் நாடார் அவர்களின் குடும்பத்தினரும் சுமார் 25 வருடமாய் மிகவும் நெருங்கிய தொடர்வு வைத்திருக்கிறன்றனர்.

தோழர் நாடார் அவர்கள் யுத்த நிதிக்கு தாமாகவே பெரிய நன்கொடை வழங்கி தனத சமூகத்தினர்களுக்கு வழிகாட்டியாக இருந்ததுடன் அவரே முன்னின்று தன் சமூகத்தினர்களையும் பெரும்தொகை சேர்த்து யுத்த நிதிக்கு வழங்கச் செய்தார். இந்திய துருப்புகளின் உபசரிப்பிலும் தோழர் நாடார் அவர்கள் அதிகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

செல்வரான தோழர் நாடார் அவர்கள் தம் சமூகத்தினர்களுக்கு வழங்கியுள்ள நன்கொடைகளை அச் சமூகத்தினர் நன்கறிவர். இவைகளை எல்லாம் விளம்பரப் படுத்திக் கொள்ள தோழர் நாடார் அவர்கள் விரும்பவில்லை. தம்மைப்பற்றி தாமே பிரமாதப் படுத்தி எழுதியும் பிறரை விட்டு எழுதச் சொல்லியும் அதைப் பத்திரிகையில் பிரசுரித்துக் கொள்ளுவோர் பலருண்டு. அத்தகைய தற்புகழ்ச்சியை தோழர் நாடார் அவர்கள் முற்றாய் வெறுப்பவர். வலது கையால் கொடுப்பது இடது கைக்கு தெரியக கூடாதென்ற மேலான சித்தாந்த முடையவர் தோழர் நாடார். இவ்வருங்குணங்கள் நிரம்பப் பெற்ற நமது தோழர் நாடார் அவர்களுக்கு அரசாங்கத்தார் சமாதான நீதிபதி பட்டம் வழங்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. அப்பாராட்டையே இன்று நாம் செய்கின்றோம். தோழர் நாடார் அவர்கள் இன்னும் அதிக பாக்கியங்களைப் பெற்று பட்டதாரியாய் நீடுழி வாழப் பிரார்த்திக்கேறன்.

தோழர் நாடார் அவர்கள் இந்த உபசார வார்த்தைகளுக்குப் பதிலளிக்கையில்,
தலைவர்கள் அவர்கள் என்னைப் பற்றிய பேசிய அன்பான வார்த்தைகளுக்காக என் வந்தனத்தைச் செலுத்துகிறேன்.

கனவான்களாகிய நீங்கள், திரேக சிரமததையும் சொந்த வேலைகளையும் பொருட்படுத்தாது இன்று இவ்விடம் வந்து என்னை கெளரவப்படுத்தியதற்காக உங்கள் யாவருக்கும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

நண்பர் ரத்தினம் பிள்ளை அவர்கள் திரேக சிரமத்தையம் பணச் செலவையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருப்பது அவர்களுக்கு என்மேலுள்ள நல்லெண்ணத்தையும் அன்பையும் காட்டுகிறது.

மேன்மை தங்கிய கவர்னர் அவர்கள் எனக்கு சமாதான நீதிபதி என்ற பட்டத்தைக் கொடுத்திருப்பதைக் குறித்து ஒரு சங்கத்தார் ஒரு கொண்டாட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டதற்கு நான் இணங்காமல் அந்த கொண்டாட்டத் திற்காக வசூல் செய்த பணத்தை யுத்த நிதிக்கு அனுப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. சங்கங்களின் அபிவிருத்தியை முன்னிட்டு அங்கத்தினர்கள் சேர்த்து வைத்துக்ளள சேம நிதிகளை விருந்துபசாரங்களில் விரயம் செய்வது சரியல்ல. யுத்த காலத்தில் அவ்வாறு விரயப்படுத்தும் பணங்களை யுத்த நிதிக்கு கொடுப்பது சிறந்த காரியமாகும்.

மன்னர்பிரானுக்காவும் தேசத்திற்காகவும் எத்தனையோ பேர்கள் உயிரைக் கொடுத்து நடத்தும் யுத்தத்திற்கு நாம் எவ்வகையிலும் பணத்தை யாவது கொடுத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். இருந்த போதிலும் நண்பர் ரத்தினம் பிள்ளை அவர்கள் தனிப்பட்ட முறையில் சிநேகிதர் என்ற காரணத்தால் விருந்து நடத்தியதால் அவர்களுக்கும் இங்கே விஜயம் செய்த உங்கள் யாவருக்கும் என் வந்தனத்தை மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று கூறினார்.

கடைசியாக திரு இரத்தினம் அவர்கள் மலாய் பாஷையில் வந்திருந்தோர் எல்லோருக்கும் தமது வந்தனத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு விருந்தில் ஏதேனம் குறைபாடுகள் இருந்தால் அவற்றிற்கு மன்னிக்கும்படி யாகவும் கேட்டுக் கொண்டார். இத்தோடு விருந்து கூட்டம் வெகு குதூகலமாய் கலைந்தது.

உ. ராமசாமி நாடாருக்கு ஜே.பி. பட்டம்

உ. ராமசாமி நாடாருக்கு ஜே.பி. பட்டம்

பத்திரிகைகள் பாராட்டுதல் (குடியரசு 18.08.1940)

எந்தக் காரியத்தையும் தீர்க்ககாலோசனையுடன் செய்து முடிப்பவர்கள் வெகு சிலரே. அச்சிலருள் சிங்கப்பூர் பிரபல வர்த்தகரும் பெரிய தனவந்தரும் பரோபகாரருமான கனம் உ. ராமசாமி நாடார் அவர்களும் ஒருவர். அவசரப்பட்டு ஒரு காரியத்தில் இறங்கி பிறகு அவஸ்தைப்படும் வழக்கம் நம் நாடார் அவர்களிடம் கிடையாது. அதைப்போலவே ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ஒரு காரியத்ல் இறங்கிவிட்டால் அதில் வெற்றி பெறாமல் பின்னடைவது மில்லை. இந்த குணமே கனம் நாடார் அவர்களின் இன்றைய நிலைçக்கு அடிப்படை என்று கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமின்றி கூறிவிடாலாம்.
சரித்திர பிரசித்திப் பெற்ற பாண்டிய நாட்டிலே ராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர் தாலுகாவைச் சேர்ந்த மணச்சை என்ற இயற்கை அழகில் சிறந்து விளங்கும் சிற்றூரிலே சூத்திர குலமணி, கருணையும் புகழும் நிறையயப் பெற்ற பெரியார் உடையப்ப நாடார் அவர்களுக்குகும் உத்தமி சுபலட்சணங்களும் கூடிய திருவாட்டி சின்ன கருப்பாயி அம்மாள் அவர்களுக்கும் சர்வதாரி ஆண்டு ஆவணித் திங்கள் 19ந் தேதி ஞாயிற்றுக் கிழமை தவப் புதல்வராய்ப் பிறந்த கனம் ராமசாமி நாடார் அவர்கள் சுமார் 32 வருடங்களுக்கு முன் மலாய் நாட்டுக்கு வந்தவர்.
இந்த நாட்டுக்கு வந்த இரண்டொரு வருடங்களுக்குள்ளாகவே சிங்கையிலும் பினாங்கிலும் , ஆப்காரி காண்டிராக்டராயருநதும் (1912 முதல் 1929 வரை) அரசாங்கத்திடம் மேற்படி தொழிலில் நல்ல பெயருடன் செல்வமும் சம்பாதித்தார். அத்துடன் நில்லாமல் மளிகை வியாபாரத்தை விரிவாக ஆரம்பித்து தமிழர்களிலும் பெரிய வியாபாரிகள் உண்டு என்ற பெயரை நிலைநாட்டியவர் கனம் நாடார் அவர்களேயாவர்.

1919 ஆம் ஆண்டிலேயே இந் நாட்டில் குடும்பத்துடன் குடியேறி இன்று பெரிய நிலச்சுவான்தாரராகவும் முனிசிபாலிட்டிக்கு தமிழர்களில் அதிக வரிப்பணம் கொடுப்போர்களில் ஒருவராயும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். பொருள் செல்வத்தில் சிறந்து விளங்கும் கனம் நாடார் அவர்கள் தோழர்கள் இரத்தினம் அம்மாள், ராக்காயி அம்மாள் என்னம் இரண: உத்தம மனைவிகளைப் பெற்றிருப்பதுடன் மக்கள பேற்றிலும் 4 புதல்வர்கள் 7 புதல்விகளுடன் சிறந்து விளங்குகிறார்கள். அவர்களின் புதல்வர்களில் ஒருவர் அண்ணாமலை சர்வகலாசாலையில் உயர்தரக் கல்வி பயின்று வருகிறார். தமது மூத்த புதல்வியாம் தோழர் கோவிந்தம்மாளை மணஞ்செய்து கொடுத்ததன் மூலம் தோழர் பி. ஆதித்தன் அவர்களை மாப்பிள்ளையாக அமைந்திருக்கும் தோழர் நாடார் அவர்கள் பல பெளத்திரர்களையும் பெற்று விளங்ககிறார்.

ராஜ விஸ்வாசத்திலும் யாருக்கும் பின்னடைந்தவர்கள் அன்று என்பதை மலாயா தேச பக்த நிதிக்கு இரண்டு தடவைகளில் 6000 வெள்ளி அறித்ததன் மூலமும் சென்ற மகா யுத்தத்தின் போது அரசாங்கத்துக்கு பொருளுதவி செய்ததினமூலமும் நிரூபித்திருக்கிறார்கள். மலாயா தேச பக்த நிதிக்கு தென் இந்தியர்கள் பிரிவுக்கு சேர்மனாக தலைமை வகித்து பெரும் தொகையும் வசூலித்துக் கொடுத்தார்கள். மேலும், இந்தியாவிலிருந்து இவ்விடம் வந்திருக்கும் இந்தியத் துருப்புகள் களிப்பூட்டு நிதிக்கு முதலில் நன்கொடையாக வெள்ளி 500 கொடுத்ததுடன் 1940ஜனவரி மாதத்திலிருநது மாதா மாதம் வெள்ளி 50 சந்தாவாகக் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள். மேற்படி துருப்புகள் நிதிக்கு மற்றும் வியாபாரிகளிடமும் மற்றவர்களிடமும் தமது செல்வாக்கினால் வசூல் செய்து பெருந்தொகை கொடுத்திருக்கிறார்கள. பொது ஸ்தாபனங்களும் பாடசாலைகளும் என்பதில் கனம் நாடார் அவர்களுக்கு அதிக ஆர்வம் உண்டு. அதற்காக பல் பொதுஸ்தாபனங்களுக்கு பொருளுதவி வந்திருப்பதுடன் தமிழர் சீர்திருத்த சங்கத்தின் போ­கர்களாகவுமிருந்து வருகிறார்கள். இந்தியாவில் குன்னக்குடியில் நாடார் மடத்தை அதிய பிரயாசையின் பேரில் கட்டி முடித்திருப்பது கனம் ராமசாமி நாடார் அவர்களுக்கு சமூக முன்னேற்றத்திலும் பொது காரியங்களிலும் இருக்கும் ஆர்வத்தைக் காட்டுவதாகும். இவ்வளவு நன் நோக்கத்துடனும் தாராள சிந்தையுடனும் பல ஸ்தாபனங்களுக்கு பொருளுதவி செய்திருந்தும் எதிர்பார்க்கப்பட்ட பலனோ அபிவிருத்;திகளோ ஏற்படவில்லை யயன்றால் அது நாடார் அவர்களின் தவறாக மாட்டாது.

செல்வத்தில் மூழ்கிக் கிடக்கும் சிலரைப்போல் ஏழை மக்களை கண்டால் சீறி விழாமல் பசித்து வரும் பாட்டாளி மக்களுக்கு உணவளித்து சில சமயங்களல் உடுக்கத் துணியில்லாதவர்களுக்கு உடையளித்து வருவது கனம் நாடார் அவர்களின் அரிய செய்கையில் ஒன்று. இச் சிங்கையில் எத்தனையோ தமிழ்ப் பிரமுகர்கள் வதிந்தார்கள். பலமலைகளுக்கும் நிலங்களுக்கும் சொந்தக் காரர்களாயிருந்த அவர்கள் பெயரும் சொத்து சுதந்தரங்களும் மரணத்துக்குப் பின் மறைந்து விட்டது என்பதை அறிந்திருக்கும் கனம் இராமசாமி நாடார் அவர்கள் தமது பெயரை என்றும் நிலைத்திருக்கும் படி யாகவும் தமிழ்நாட்டினருக்கு பயன்படும்படியாகவும் ஏதேனும் ஒரு சிறந்த காரியத்தை செய்து விட வேண்டுமென முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆழ்ந்த யோசனைக்குப் பின் செய்திருக்கும் இந்த முடிவின் படி அக்காரியத்தை விரைவில் செய்து தமிழர்களின் நன்றிக்கு என்றென்றும் உரித்தானவர்களாக விளங்குவார்கள் என்று எதிர்பார்ப்மோமாக.(தமிழ்முரசு)

உலகத்தில் எடுத்த காரியத்தை ஆரஅமர தீர்க்கமாக யோசித்து கிரியாம்சையிலிறங்கிய பிறகு என்ன நேரினும் நிலை கலங்காது வைரம் போன்ற வைரம் போன்ற மன வுறுதியோடு செய்து முடிப்பவர் மிகச் சிலரே என்பது வெள்ளிடைமலை. அச் சிலருள் சிங்கப்பூர் பாரி வியாபாரியும் பிரபல நிலச் சுவான்தாரும், ரப்பர் எஸ்டேட் சொந்தக்காரரும், பெரிய தனவந்தரும், பரோபகாரியும், ஏழை பங்காளருமான தோழர் உ. இராமசாமி நாடார் அவர்களும் ஒருவர். இவர் இந்தியன் அசோசி­ன் பேட்ரனும், தமிழர் சீர்திருத்த சங்கம் தன போ­கரும், விவேகானந்த சன்மார்க்க சங்கம், சிங்கை தமிழர் இளைஞர் கழகம் முதலிய பொது ஸ்தாபனங்களின் தன போ­கரும், தென்னிந்திய வர்த்தக சங்கத்தின் வைஸ் சேர்மனும் பினாங்கு இந்து சபை போ­கருமாவார்.

சரித்திர ஆராய்ச்சிக்கு எட்டாத காலம் முதல் அறத்துக்கு உறைவிடமான நமது பரத கண்டத்துள் அருட்கும், தண்டதமிழ் மொழிக்கும் நிலைக்களாயிலங்கும் தென்பாண்டி நாட்டிலே இராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர் தாலுகாவை சார்ந்ததும் இயற்கை தேவியினது பூரண ஜாஜ்வல்லியத்துடன் நர்த்தனம் செய்யப் பெற்றதுமான மணச்சை எனும் சிற்றூரில் சத்திரிய குல மணிகளுள் நாயகமணியாக ஒழுக்கம், பொறை, புகழ் நிறைந்த பெரியார் தோழர் உடையப்ப நாடார் அவர்களுக்கும் பூர்த்தியான சுபலட்சணங்கள் நிறைந்த திருவாட்டி சின்னகருப்பாயி அம்மாள் அவர்களுக்கும் சர்வதாரி வரு­ம் ஆவணி மாதம் 19 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையாகிய நன்னாளில் தவப்புதல்வராக பிறந்த தோழர் ராமசாமி நாடார் அவர்கள் 32 வருடங்களுக்கு முன் மலாய் நாட்டுக்கு வந்தவர். அந்நாட்டுக்கு வந்த இரண்டொரு ஆண்டுகளுக்குள் சிங்கப்பூரிலும் பினாங்கிலும் ஆப்காரி கான்ட்ராக்டராயிருந்து, 1912 இல் இருந்து 1919 வரை மேற்படி தொழிலில் அரசாங்கத்தினரிடம் நல்ல பெயருடன் பெரும் பொருள் சம்பாதித்திருக்கிறார்.

இந்நாட்டுக்கு வந்து கொஞ்சம் பொருள் தேடியதும் இந்தியாவுக்கு திரும்பிவிடும் பெரும்பாலான ஜனங்களைப் போலன்றி 1919 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் தனது தாயாதிகளிடம் பாகப் பிரிவினை செய்து கொண்டு இந்நாட்டில் குடும்பத்துடன் குடியேறி, சிங்கையிலும், மூவாரிலும் ஜவுளி‡மளிகை வியாபாரத்தை விரிவாக ஆரம்பித்து நடத்தி தமிழர்களிலும் பெரிய வியாபாரிகள் உண்டு என்ற பெருமையை நிலைநாட்டியிருக்கிறார். இன்று இச்சிங்கையில், முனிசிபாலிட்டிக்கு இந்தியர்களில் அதிக வரிப்பணம் செலுத்துவோர்களில் ஒருவராயும் தமிழர்களில் தலைசிறந்தவராயும் விளங்குகிறார்.
செல்வச் சீமான் நாடாரவர்கள் 4 புதல்வர்களையும் 7 புதல்விகளையும் பெற்றிருக்கிறார்.
அவர்களின் புதல்வர்களில் ஒருவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உயர்தரக் கல்வி பயின்று வருகிறார். தமது சிரேஷ்ட குமாரி பங்கயச் செல்வி ¼Vவிந்தம்மாளை மணம் செய்து கொடுத்ததின் மூலம் சிறந்த லாயர்களில் ஒருவரான தேழர் எஸ்.பி. ஆதித்தன், எம்.ஏ பாரிஸ்டர் அவர்களை மாப்பிள்ளையாக அடைந்திருப்பதுடன் பல பெளத்திரர்களையும் பெற்று விளங்குகிறார்.

ராஜவிசுவாசத்திலும் யாருக்கும் பின்னடைந்தவர் அன்று என்பதை மலாயா தேச பக்த நிதிக்கு வெள்ளி 6000 - கொடுத்ததின் மூலமும், சென்ற மகா யுத்தத்தின் போது பெரும் பொருள் உதவி செய்ததின் மூலமும் நிரூபித்திருக்கிறார். மலாயா தேசபக்த நிதிக்கு தென்இந்தியர் பிரிவுக்கு சேர்மனாக தலைமை வகித்து பெருந்தொகை வசூலித்துக் கொடுத்திருக்கிறார்.
மேலும் இந்தியாவிலிருந்து இவண் வந்திருக்கும் இந்திய துருப்புகளின் களியாட்டு நிதிக்கு முதலில் நன்கொடையாக வெள்ளி 500 கொடுத்ததுடன் 1‡1‡40 முதல் மாதாமாதம் 50 வெள்ளி சந்தாவாகவும் கொடுத்துக் கொண்டு வருகிறார். மேற்படி துருப்புகள் நிதிக்கு மற்றும் வியாபாரிகளிடமும் தனது செல்வாக்கினால் பணம் வசூலித்துக் கொடுத்திருக்கிறார். தற்சமயம் யுத்த நிதிக்கு வெள்ளி 100 கொடுத்தும், யுத்த நிதிக்கு தென்இந்தியர் பிரிவு கமிட்டிக்கு சேர்மானகவும் இருந்து வசூலித்து வருகிறார்.

பொதுஸ்தாபனங்களும் பாடசாலைகளும் முன்னுக்கு வர வேண்டும் என்பதில் தோழர் நாடார் அவர்களுக்கு அளவு கடந்த ஆர்வம் உண்டு. அதற்காகப் பல பொது ஸ்தாபனங்களுக்கும் பலகாலும் பொருளுதவி செய்திருக்கிறார். இதனின்றி பல சங்கங்களுக்கும் பொருளுதவி செய்திருப்பதுடன் இம்மலாயவிற்கே இந்து சமூகத்தின் முதல் ஸ்தாபனமாக உள்ள பினாங்கு இந்து சபையின் ஜீவிய போ­கராகவும் இருந்து வருகிறார்.

குன்னக்குடியில் நாடார் மடத்தை அதிக பிரயாசையின் பேரில் கட்டி முடித்திருக்கும் சிறப்பு குன்னக்குடி திருமுருகன் ஆலயத்திற்கு ஏகும் அன்பர்களுக்கு தெற்றென விளங்கா நிற்கும். இத்தியாதி காரியங்கள் தோழர் நாடார் அவர்களுக்கு சமூக முன்னேற்றம் பெண்கல்வி, தேசாபிமானம், முதலியவைகளில் உள்ள பேரார்வத்தை காட்டுகின்றன.
ஏழை மக்களை கண்டால் சீறிவிழும் சிலரைப் போல் அல்லாமல் பசித்து வரும் பாட்டாளி மக்களுக்கு உணவளித்து, சிலவேளை உடுக்க உடையற்றவர்களுக்கு உடையளித்தும் ஆதரித்து வருவது தோழர் நாடார் அவர்களின் அரிய செய்கைகளில் ஒன்று. இந்த அருங்குணமே தோழர் நாடார் அவர்களின் இன்றய உயரிய நிலைமைக்கு அடிப்படை என்பதை கொஞ்சமும் சந்தேகமின்றி கூறிவிடலாம்.

சிங்கை இந்தியன் அசோசியே­ன் கட்டிட நிதிக்கு வெள்ளி 5000 கொடுத்திருக்கிறார். இராமகிருஷ்ண மடாலயம், விவேகானந்த சன்மார்க்க சங்கம் இவைகளுக்கு பொருளுதவி செய்திருப்பதுடன் மாத சந்தாவாக நன்கொடையும் அளித்து வருகிறார். தென் இந்திய வர்த்தக சங்க நிதிக்காக வெள்ளி 600 கொடுத்திருக்கிறார். சங்க முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறதுடன் மேற்படி சங்கத்தின் உப தலைவராகவும் இருந்து வருகிறார்.

ஏழை மக்களுக்கு வைத்திய உதவி அளிப்பதற்காக பினாங்கு இந்து சபையின் மாரலாக வெள்ளி 1000 கொடுத்தும், சிங்கப்பூர் பெண் பாடசாலை ஒன்றுக்கு பொருள் உதவி செய்தும், சிங்கை முனிசிபாலிடிக்கு பணம் வாங்காமலே தனக்கு சொந்தமாயிருந்த நிலத்தை ரோடு போடுவதற்காக இனமாக கிராண்டு போட்டுக் கொடுத்தும் கோலாலம்பூர் பத்துமலை தெண்டாயுதபாணி ஆலயத்திற்கு படிகள் கட்டுவதற்கு நன் கொடை அளித்தும், ரக்சன்ய சேனை நிதிக்கும், செயின்ட் இல்தா பள்ளிக்கூட கட்டட நிதியளித்தும், காரைக்கால் சேகரம் திருமலையராயன் பட்டணம் அருள்பாரத சங்க கட்டட நிதிக்கு ரூ. 500 கொடுத்தும், புதுக்கோட்டை ஸ்டேட்டைச் சார்ந்த காட்டுப்பாடியில் பள்ளிக்கூடம் கட்டட நிதிக்கு 500 இம் கொடுத்தும் இன்னும் பல சிறிய தருமங்களும் செய்திருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் அந்நாளில் எத்தனையோ தமிழ் பிரமுகர்கள் வசித்து வந்தார்கள். பல மலைகளுக்கும் நிலங்களுக்கும் சொந்தக்காரர்களாயிருந்த அவர்கள் அவர்களது மரணத்திற்குப் பின் அவைகள் மறைந்து விட்டதை செவ்வனே அறிந்திருக்கும் தோழர் நாடார் அவர்கள் தமது பெயரை என்றும் நிலைத்திருக்கும்படியாகவும் தமிழ் நாட்டினருக்கு பயன் தரக்கூடியதுமான ஒரு காரியத்தை உடனே செய்து விட வேண்டுமென முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. தீர்க்காலோசனையுடன் செய்திருக்கும் இச்சிறந்த முடிவின் படி அக்காரியத்தை விரைவில் செய்து தமிழர்களின் நன்றிக்கு என்றென்றும் உரித்தானவர்களாக விளங்குவார்களென்று எதிர்ப்பார்ப்போமாக.(விடுதலை)

தமிழர் பிரதிநிதித்துவ சபை,

தமிழர் பிரதிநிதித்துவ சபை, சிங்கப்பூர்

ஐக்கியமே பலம்

ஒன்பதாம் ஆண்டு அறிக்கை (27.03.1960)


தமிழர் பிரதிநிதித்துவ சபை இடையறாது பல நல்ல பணிகளை மேற்கொண்டதன் காரணமாகவும் சந்தர்ப்பச் சூழ்நிலை காரணமாகவும் சென்ற ஆண்டு வருடாந்தரப் பொதுக்கூட்டம் நடைபெறாமல் பழைய நிர்வாகிகளே தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளனர்.
கடந்த இரண்டாண்டுகளில் செயற்குழுக் கூட்டங்கள் 4, பொதுக்கூட்டங்கள் 16, பாராட்டு, வரவேற்புக் கூட்டங்கள் 3, அனுதாபக் கூட்டங்கள் 2 ஆக 25 கூட்டங்கள் நடைபெற்றன.
சென்ற ஆண்டுக் கூட்டத்திற்கும் (17.11.1957) இக் கூட்டத்திற்கும் இடையே மூன்று தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

சபையில் இணைந்துள்ள 45 சங்கங்களில் 145 உறுப்பினர்கள் உள்ளனர். இச் சங்கங்களில் 5 சங்கங்கள் இயங்காமல் மறைந்துவிட்டன. எஞ்சி இருப்பவை 40 சங்கங்கள்.

17.11.1957 இல் நடைபெற்ற ஆறாம் ஆண்டுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வருமாறு;
தலைவர் : திரு.கோ. சாரங்கபாணி
உப தலைவர்கள்: 1. ஆர்.எம். கிருஷ்ணன்
2. வயி. சண்முகம் செட்டியார்
3. திரு. எஸ்.சையத் அகமது.
கெளரவ காரியதரிசியாகவும் பொக்கிஷாதிபரும்: திரு.எம்.எம். மாலை
உதவிக் காரியதரிசி: திரு. தி. செல்வகணபதி
கூட்டு உதவிக் காரியதரிசி: திரு. முருகு. சீனிவாசன்

காரியக் கமிட்டி உறுப்பினர்கள் :
திருவாளர்கள் ந.கருப்பையா, அ.அரு. சொக்கலிங்கம் செட்டியார், வெ.கோபாலன், கு.கா. கெங்காசலம், சே. நடராஜன், என்.எஸ்.ஷாகுல் ஹமீது, ஏ.என்.மெய்தீன், எஸ்.சிங்காரவேலு, க. கிருஷ்ணன், பா.ஆறுமுகம், சு.நாராயணசாமி, எம்.கே. பக்ருதீன், எஸ்.செளந்தரராஜன், கு.முருகையன், நா.கோ. வீரையா, பி. சோமசுந்தரம், வெ. கோவிந்தராசு, கு.பழனிவேலு.

சபையின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் இணைந்திருக்கும் சங்கங்களும் கடந்த இரண்டாண்டுகளில் போற்றத்தக்க ஒத்துழைப்பைத் தந்து, சபை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறப் பேருதவி புரிந்தனர்.

சபையின் நன்முயற்சிகளுக்குச் சென்னையிலிருந்து பேராதரவு தந்துவரும் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களுக்குச் சபை என்றும் கடமைப்பட்டிருக்கிறது.
சபையின் பொதுக்காரியதரிசி திரு. எம்.எம்.மாலை அவர்கள் தொழில் காரணமாகச் சென்னையில் நீண்டகாலம் தங்க நேர்ந்து விட்டது. தமிழகத்தில் ஆக வேண்டிய காரியங்களுக்கு அவர் அங்கிருந்து உதவி செய்து வருகிறார். துணை தலைவர்கள் திரு. ஆர்.எம்.கிருஷ்ணன் அவர்களும் திரு.எஸ்.சையத் அஹமது அவர்களும் தமிழகத்திற்குச் சென்று விட்டனர். இவர்கள் பதவி வகித்த காலத்தில் சபைக்குப் புரிந்த சிறந்த சேவைகளுக்குச் சபை கடமைப்பட்டிருக்கிறது.

தமிழர் பிரதிநிதித்துவ சபைக்கு இரு பெரும் தூண்கள் போல் நின்று பேருதவி புரிந்து, பாராட்டத் தக்க சேவைகள் ஆற்றிய சென்னை தியாகராயர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எம்.கே. சண்முகம் அவர்களும் சைகோன் வள்ளல் அப்துல் அசீஸ் அவர்களும் மறைந்தது குறித்து ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து இரண்டு இரங்கற் கூட்டங்கள் நடைபெற்றன.
மலாயாவில் கலை வளர்ச்சிக்குச் சபை பூரண ஆதரவு அளித்து வந்திருக்கிறது. இத்துறையில் தன் பங்காகச் சிங்கப்பூர் தமிழர் சார்பில் சபை பல முத்தமிழ்க் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பொது மக்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்பாடு செய்த கலை விழாவில் சபை இரண்டு நாள் முத்தமிழ்க் கலை நிகழ்ச்சிகள் நடத்தி எல்லாச் சமூகத்தினரின் பாராட்டையும் பெற்றது. தமிழர்களின் பழந்தமிழிசைக் கலைகளான சகோட யாழ், வில்லுப்பாட்டு ஆகியவற்றிற்கு சபை பேராதரவு தந்து அவ்விசை நிகழ்ச்சிகளை சிங்கப்பூரில் ஏற்பாடு செய்தது. சாத்தூர் டாக்டர் பிச்சைக்குட்டி அவர்களின் வில்லிசை நிகழ்ச்சிகளையும் வித்துவான் பு.ஊ.கே. நடராஜ பிள்ளை அவர்களின் சகோட யாழ் நிகழ்ச்சிகளையும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பெருமக்கள் பேராதரவு தந்து சிறப்பித்தனர்.
அண்மையில் ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் இளவல் தமிழிசை மன்னர் எம்.கே. கோவிந்தராஜ பாகவதரின் இன்னிசைக் கச்சேரிகள் விக்டோரியா தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டன. சபையின் உறுப்பினர்களும் பொது மக்களும் பேராதரவு தந்து உதவினர்.

சிங்கப்பூரில் கம்போங் கூசாயிலும் கம்போங் தியோங்பாரிலும் ஏற்பட்ட தீ விபத்து களில் சிக்கிப் பாதிக்கப்பட்ட பொது மக்கள் துயர் தீர்க்க சிங்கப்பூர் தமிழர் சார்பில் தீ நிவாரண நிதி திரட்டி அளிக்கப்பட்டது. கம்போங் கூசாய் தீ நிவாரண நிதி சேர்க்கச் சபை ஏற்பாடு செய்த நடனக் கலை நிகழ்ச்சிகளுக்கு பாஸ்கர் நடன அரங்கம் பேருதவி புரிந்தது.
கலைத்துறையில் மட்டுமல்லாது சமூக, இலக்கியத்துறைகளிலும் சபை பெருந் தொண்டு புரிந்திருக்கிறது. நகரசபை தொடங்கிய அம்மைத் தடுப்பு இயக்கத்திற்குச் சபை தன் ஒத்துழைப்பைத் தந்து த.சீ.சங்கக் கட்டிடத்தில் ஏராளமான மக்களுக்கு அம்மைத் தடுப்பு ஊசி போட உதவியது. நகர சபை மேற்கொண்ட மக்கள் சுகாதார இயக்கத்திற்கும் சபை முழு ஆதரவு தந்து த.சீ.சங்கக் கட்டிடத்தில் சுகாதாரக் கண்காட்சிகளுக்கும் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்தது.

இலக்கியத் துறையில் தமிழ்க் கல்வி வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் சபை, தேசியக் கல்வி வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வந்தது. மலாயாத் தமிழரிடையே தேசிய மொழி ஆர்வத்தைப் பெருக்க, மலாயா தேசிய மொழி வாரத்தையயாட்டித் தமிழ் இலக்கியச் சிறுகதைப்போட்டி (மலாய் மொழியில்) நடத்தியது.
மலாய் இளைஞர் மன்றம் ஏற்பாடு செய்த மலாய்க்காரர் அல்லாதாரின் மலாய்ப் பேச்சுப் போட்டிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சபை மூன்று வெள்ளிக் கோப்பைகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

1958 - ம் ஆண்டில் கொண்டாடப்பட்ட தமிழர் திருநாளுக்குத் தமிழகத்திலிருந்து பேராசிரியைகள் நாகம்மையாரும் ரத்னாவதியாரும் வந்து கலந்து கொண்டனர். 1959 - ல் நடைபெற்ற தமிழர் திருநாளில் பேராசிரியர்கள் கோவிந்தராசும் மாஸ்கரனேசும் கலந்து கொண்டனர். இவ்வாண்டு கொண்டாடப்பட்ட தமிழர் திருநாளில் பேராசிரியர்கள் சுந்தரமும் சஞ்சீவியும் கலந்து கொண்டனர். தமிழகத் திலிருந்து வந்த பேராசிரியர்கள் எல்லாம் மலாயாத் தமிழர் முன்னேற்றத்திற்கான நல்ல கருத்துக்களைக் கூறிச் சென்றதோடு இங்கு இதர இனத்தவருடன் இணைந்து பொது மலாயா சமுதாயம் உருவாகவும் பொது கலாச்சாரம் உருவாகவும் தமிழர் தம் பண்பாட்டிற் கேற்ப நடந்து கொள்ள வேண்டுமென்றம் இந் நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இந் நாட்டிற்கே பூரண விசுவாசம் செலுத்த வேண்டுமென்றும் வலியுறுத்திக் கூறினர்.

இவ்வாண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழர் திருநாள் தனிச் சிறப்புப் பெற்று விளங்கியது. உள்நாட்டுத் தன்னாட்சி பெற்ற சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் தமிழர் திருநாள் இதுவே என்னும் காரணத்தால் திருநாள் நிகழ்ச்சிகள் தனி முக்கியத்துவம் பெற்றன. மந்திரிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் திருநாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திருநாளின் நோக்கம், சாதனைகள், சபையின் நோக்கம், சாதனைகள், எதிர் காலத்தில் சபையினின்று எதிர்பார்க்கும் முயற்சிகள் ஆகியவை பற்றிப் பெரிதும் பாராட்டிப் பேசினார்கள்.

தமிழர் திருநாள் கொண்டாடுவதன் பலனாக மலாயத் தமிழ்மக்களிடையே ஏற்பட்டுவரும் விழிப்பு, ஐக்கியம், இதர சமூகத்தினருடன் கூட்டுறவு, முன்னேற்றம் ஆகியவை அன்று அவல நிலையில் அமிழ்ந்திருந்த தமிழர் இன்று அரசாங்கத்தின் அங்கீகாரத்தையும் பிற சமூகத்தினரின் நன்மதிப்பையும் பெற்று எத்துணையளவு உயர்ந்திருக்கின்றனர் என்பதை நன்கு விளக்குகின்றன.

இவ்வாண்டு நடைபெற்ற தமிழர் திருநாளின் பொதுக் கூட்டங்களுக்கு வருகை தந்திருந்த தமிழ் அன்பர்களிடமிருந்து நிதி வசூல் செய்து சிங்கப்பூர் தேசிய அரங்க நிதிக்கு நன்கொடை அளிக்கப்பட்டது. சபையின் சார்பில் இன்னும் பல கலை நிகழ்ச்சிகள் நடத்தி, புதிய சிங்கப்பூரின் பெருமையை உணர்த்தும் அளவில் கட்டப்படவிருக்கும் தேசிய அரங்கத்திற்கு நிதி திரட்டிக் கொடுக்க வேண்டுமென்பது சபையின் பேராவல். சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் பொது மக்களின் பேராதரவும் இருந்தால் இப்பணியைச் சபை சிறந்த முறையில் செய்ய முடியும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.

கடந்த ஆண்டுகளில் சபையும் சபையில் இணைந்திருக்கும் சில சங்கங்களும் நம் தமிழ்மக்கள் இந் நாட்டுப் பிரஜைகளாகப் பதிவு செய்து கொள்ளப் பேருதவி புரிந்தன. அதன் காரணமாகப் பல ஆயிரம் மக்கள் பிரஜைகளாகப் பதிவு செய்து கொண்டனர். எனினும் இன்னும் பெரும்பான்மையோர் பிரஜைகளாகப் பதிவு செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். தமிழர்கள் அனைவரும் இந்நாட்டுப் பிரஜைகளாக வாழும் நிலை காண சபையும் சபையில் இணைந்திருக்கும் சங்கங்களும் வழிவகைகள் காண வேண்டும்.

இச் சபையின் பெருமுயற்சியின் காரணமாகவும் தமிழ்ப் பெருமக்களின் பேரா தரவின் காரணமாகவும் உருவாகிய மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பகுதியும் தமிழ் நூல் நிலையமும் பல்கலைக் கழகத்தின் கோலாலம்பூர் கிளைக்கு மாற்றப்பட்டு விட்டன. சிங்கப்பூர்ப் பிரிவிலும் தமிழ்ப்பகுதியையும் தமிழ் நூல் நிலையத்தையும் காணுவதற்கான முயற்சியைச் சபை மேற்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் தமிழ் உயர்நிலைப் பள்ளிகள் எழுப்பும் முயற்சிகளுக்குச் சபை என்றும் முழு ஆதரவு அளித்து வந்திருக்கிறது. இனியும் அத்துறையில் அதிக அக்கறை செலுத்தும்.
சபை தற்பொழுது தமிழர் சீர்திருத்தச் சங்கக் கட்டிடத்தில் வாடகைக்கு இருந்து வருகிறது. சபை தோன்றி ஒன்பது வருடம் ஆகிவிட்டது. சபை ஆற்றியிருக்கும் தொண்டுகளோ வியக்கத்தக்கவை. சிங்கப்பூர் தமிழ் மக்களைப் பிரதிநிதிக்கும் ஒரே நிறுவனமாய், ஒப்பற்ற ஊழியராய்ச் சபை அயராது உழைத்து வருகிறது. உழைப்பின் காரணமாய்த் தமிழ் மக்களின் நன் மதிப்பை இத்துணை அளவிற்குப் பெற்ற தமிழர் பிரதிநிதித்துவ சபைக்குத் தனக்கெனச் சொந்தமாக ஓர் இடம் இன்னும் அமையவில்லை. இக்குறை போக்க இவ்வாண்டு முதல் சபை முயற்சி செய்ய வேண்டும்.

தென் கிழக்காசிய நாடுகளின், குறிப்பாக மலாயாக் கலாச்சார முன்னேற்றத்தில் இந்தியர் பங்கு பற்றி வரலாற்றாசிரியர்கள் பலவாறாக எழுதியுள்ளனர். இவ்வரலாற்றேடுகளில் தமிழர்கள் ஆற்றிய நற்றொண்டு பற்றித் தெளிவுறக் கூறப்படவில்லை. அறியாமையின் காரணத்தினாலோ உண்மையைத் திரைபோட்டு மறைக்க வேண்டுமென்னும் எண்ணத்தினாலோ வரலாற்றின் இப்பகுதி திருப்திகரமான முறையில் எழுதப்படவில்லை. இக்குறையை நிவர்த்தி செய்யச் சபை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாராட்டத்தக்க வகையில் பொது மக்களுக்குப் பெருந்தொண்டு புரிந்து வரும் இச் சபையின் ஒரே குறை சபைக்குச் சேர வேண்டிய சந்தாத் தொகையையும் நிதி நன்கொடைகளும் சரிவரச் செலுத்தப்படாதிருப்பதுதான். இக் குறை எல்லாச் சங்கங்களிலும் காணப்படும் மிகச் சாதாரணக் குறை என்றாலும் சபையை நல்ல முறையில் எத்தடையுமின்றி ஒழுங்காக நிர்வகிப்பதற்குப் பொருள் முக்கியமான தாகையால் சங்கங்கள் சந்தா, நிதி செலுத்தும் வி­யத்தில் சற்று அதிகமாக அக்கறை செலுத்துவது சபைக்குச் சிறப்பை அளிக்கும்.

சபையின் நற்பணிக்கு உடல் உழைப்பும் பொருளுதவியும் சபையில் இணைந்திருக்கும் சங்கங்களிடமிருந்து இன்னும் அதிகமாகக் கிடைக்கப் பெற்றால் சபை எல்லாத் துறைகளிலும் இன்னும் எவ்வளவோ நல்ல தொண்டுகள் புரியும் என்பது யாவரும் அறிந்ததே.

பொதுவாகத் தமிழர்களின் குறைகளை அகற்றச் சபை எல்லாத் துறைகளிலும் முயற்சி செய்து வருகிறது.

சுருங்கச் சொல்லின் சிங்கப்பூர்த் தமிழர் பிரதிநிதித்துவ சபை மலாயாத் தமிழ் மக்களுக்கே ஒரு சிறந்த வழிகாட்டியாக இயங்கி வருகிறது.

தமிழர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமை உரம் பெற்று உயர்ந்து இதர இனத்தவருடன் இணைந்து ஒரு தேசிய இனத்தை உருவாக்கி, இந்நாட்டுக்கு முழு விசுவாசம் செலுத்தும் உண்மைக் குடிமக்களாய்த் திகழச் செய்வதே தலையாய கடனென எண்ணிச் சபை தொண்டாற்றி வருகிறது.

தமிழர் திருநாள் வரவு செலவுக் கணக்குகள்

1952 இல் நடந்த முதல் தமிழர் திருநாள் வரவு செலவுகள்

நன்கொடை வரவு $ 2,109. 145
மொத்தச் செலவுகள் 751. 55
அதிக வரவு 1,357. 595

1953 இல் நடந்த இரண்டாம் தமிழர் திருநாள் வரவு செலவுகள்
நன்கொடை வரவு $ 2,422.05
மொத்தச் செலவுகள் 2, 422.05

1954 இல் நடந்த முன்றாம் தமிழர் திருநாள் வரவு செலவுகள்
நன்கொடை வரவு $ 6,229.01
மொத்தச் செலவுகள் 5,641 . 41
அதிக வரவு 587 .60

1955 இல் நடந்த நான்காம் தமிழர் திருநாள் வரவு செலவுகள்
1954 ஆம் ஆண்டு இருப்பு $ 587 . 60
நன்கொடை வரவு 6,357.04
மொத்தச் செலவுகள் 7,469.09
அதிக செலவு 524. 45

1956 இல் நடந்த ஐந்தாம் தமிழர் திருநாள் வரவு செலவுகள்
நன்கொடை வரவு $ 10,948.86
மொத்தச் செலவுகள்
(முன் ஆண்டின் அதிகச் செலவைத் திரும்பக் 10,416.75
கொடுத்தது உட்பட)
அதிக வரவு 532.11

1957 இல் நடந்த ஆறாம் தமிழர் திருநாள் வரவு செலவுகள்
1956 இல் இருப்பு $ 532.11
நன்கொடை வரவு 13,951.73
மொத்தச் செலவுகள்
(முன் ஆண்டின் அதிகச் செலவைத் திரும்பக் 14,693.88
கொடுத்தது உட்பட)
அதிகச் செலவு 210.04

1958 இல் நடந்த ஏழாம் தமிழர் திருநாள் வரவு செலவுகள்நன்கொடை வரவு $ 13,210.25
மொத்தச் செலவுகள்
(முன் ஆண்டின் அதிகச் செலவைத் திரும்பக் 12,320.36
கொடுத்தது உட்பட)
அதிக வரவு 889.89

1959 இல் நடந்த ஏழாம் தமிழர் திருநாள் வரவு செலவுகள்1958 இல் இருப்பு $ 889.89
நன்கொடை வரவு $ 11,692.68
மொத்தச் செலவுகள்
(டைப்ரைட்டர் ஒன்று வாங்கியது உட்பட) 14,638.25
அதிகச் செலவு 2,055.68

தமிழர் பிரதிநதித்துவ சபையில் அங்கம் பெற்றுள்ள சங்கங்களும் பிரதிநிதிகளின் பெயர் விலாசங்களும்
1. ஆதித் திராவிட முன்னேற்றக் கழகம்
221, சையத் அல்வி ரோடு - 8
1. திரு. எஸ்.கந்தசாமி, 15, லோரோங் லாலாட் ‡ 8
2. திரு.வி. பக்கிரிசாமி, 74, லோரோங் லாலாட் ‡8
3. திரு. ஏ.வீராச்சாமி, புளோக் எப், ரூம் நெம்.15, அலெக்சாண்டிரா ரோடு ‡3

2. சிதம்பரம் தாலுகா மகாஜன சங்கம்
154, ஜாலன் புசார் ‡8
1. திரு. கு.கா. கெங்காசலம், 154, ஜாலன் புசார் ‡ 8
2. திரு. க. ஆ. சாமிக்கண்ணு,154, ஜான் புசார் ‡8

3. தக்கலை முஸ்லிம் சங்கம்
6‡ஏ, ஹால்பைக் ஸ்திரீட் ‡ 6
1. ஜனாப் என்.எஸ். ஷாகுல் ஹமீது, 78, பெங்கூலன் ஸ்திரீட் ‡7
2. ஜனாப் என்.எஸ். ஹுசேன், 6, ஹால்பைக் ஸ்திரீட் ‡6
3. ஜனாப் எம்.முகம்மது அலி, 33‡36 தெலுக் ஆயர் மார்க்கெட் (2) ‡ 1
4. ஜனாப் பி.எஸ். பக்ருதீன், 33‡36 தெலுக் ஆயர் மார்க்கெட் (2) ‡ 1

4. தென்காசி முஸ்லிம் சகாய சபை
45, செங் சியோக் ஸ்திரீட் ‡6
1. ஜனாப் பி.ஏ. அமது ஷா, 47, செங் சியோக் ஸ்திரீட் ‡2, 14, செட்டி ரோடு ‡8
2. ஜனாப் பி.ஏ. சையது மெய்தீன், 49, செங் சியோக் ஸ்திரீட் ‡8

5. சீர்காழி தாலுகா தமிழர் முன்னேற்றக் கழகம்
14, செட்டி ரோடு ‡8
1. திரு.மு. சின்ன பிள்ளை, 14, செட்டி ரோடு ‡8
2. திரு. கணபதி, 14, செட்டி ரோடு ‡8


6. தமிழர் சீர்திருத்தச் சங்கம்
125, சிராங்கூன் ரோடு ‡8
1. திரு.எம்.ஐ. அகமது, 47, செங் சியோக் ஸ்திரீட் ‡2
2. து. லெட்சுமணன், 20, பப்லோ ரோடு ‡8
3. திரு.நா.கோ. வீரையா, பிளாக் ‡பி, ரூம்.17, கிங் ஜார்ஜ் அவென்யூ ‡8
4. திரு. முருகு . சுப்பிரமணியன், 192 ஏ, லவண்டர் ஸ்திரீட் ‡12
5. திரு. சு.தியாகராசன், 125, சிராங்கூன் ரோடு ‡8
6. திரு. தி. செல்வகணபதி, 192 ஏ, லவண்டர் ஸ்திரீட் ‡12
7. திரு. ந. கருப்பையா, 10, பாங் செங் ரோடு, வன் தோ அவென்யு ‡13
8. திரு. எம். கணேசன், 42, கிண்டா ரோடு ‡8
9. திரு.முருகு சீனிவாசன், 307, மார்க்ரெட் டிரைவ் ‡3
10. திரு.டி.என். கிருஷ்ணசாமி, 125, சிராங்கூன் ரோடு ‡8
11. திரு. எம்.எம். தாவூது, 192‡ஏ, லவண்டர் ஸ்திரீட் ‡12

7.சிங்கை மருத்துவர் சங்கம்
36‡டி, வாம்போ ஸ்கொயர் ‡12
1. திரு.கெ.எஸ்.எஸ்.நாதன்,36‡டி, வாம்போ ஸ்கொயர் ‡12
2. திரு. முத்து சுப்பையா, 54, கியயாங் சியாப் ரோடு ‡12

8. ஒரத்தநாடு தாலுகா தமிழர் கழகம்
96, சையது அல்வி ரோடு ‡8
1. திரு.செ.அண்ணாமலை, 96, சையது அல்வி ரோடு ‡8
2. திரு. சி.ரெங்கசாமி, 96, சையது அல்வி ரோடு ‡8

9.நன்னிலம் தாலுகா தமிழர் கழகம்
51, யஹன்டர்சன் ரோடு‡3
1. திரு. க. கிருட்டிணன், 51, யஹண்டர்சன்ரோடு ‡3
2. திரு. சு.நாராயணசாமி, 51, யஹண்டர்சன் ரோடு‡3
3. திரு. கு.செகநாதன், 40, கப் ரோடு‡8
4. திரு. கா. இரத்தினசாமி, பிளாக்‡கே, எண் 23‡24, அலெக்சாண்டிரா ரோடு‡3

10. சிலேத்தார் தமிழர் சங்கம்
177‡66 வெஸ்ட் ஹில் ரோடு‡27
1. க. அம்பலவாணன், பிளாக்‡70, நீசூன் கேம்ப் ‡27
2. பா.ஆறுமுகம், பிளாக் 138‡6, நேவல்பேஸ்
3. பா.சுப்பையா, 177‡66, வெஸ்ட் ஹில் ரோடு, சியோங் பெங் வில்லேஜ் ‡27
4. மு. பழனிசாமி, பிளாக் 41‡13, நேவல் பேஸ்


11. ஒரத்தநாடு தமிழர் நலனபிவிருத்திச் சங்கம்
71, பிரின்சப் ஸ்திரீட் ‡7
1. திரு. கே. பாலையா, 45, அப்பர்வெல்டு ரோடு ‡8
2.திரு. அ.குமாரசாமி, 71, பிரின்சப் ஸ்திரீட் ‡7


12. திருநெல்வேலி ஜில்லா பொதுநல அபிவிருத்திச் சங்கம்
199, ஜாலான் காயூ‡2
1.திரு. எஸ்.பி.கே. சுப்பையா தேவர், 189, ஜாலான் காயூ ‡28


13. திராவிடர் கழகம்
20, கிள்ளாங் ரோடு ‡8
1. திரு.த. வீரையா, 19, சி.சி. டிப்போ, ஜுசியாட் ரோடு ‡15
2. அ.கோ.வைத்திலிங்கம், 13,நோரீஸ் ரோடு ‡8
3. சு.பொ.ப.நாதன், 19, சி.சி. டிப்போ, ஜுசியாட் ரோடு ‡15
4. திரு. சு.தெ.மூர்த்தி, 42, கிண்டா ரோடு ‡8
5. திரு.மு.செ. ஹாஜி முகம்மது பி.ஏ., 2, ஸ்டார்லைட் ரோடு ‡8 ( லிக்ஷூக்ஷூ ரெங்கூன் ரோடு)
6. திரு.எஸ். கோவிந்தசாமி, 74‡76 டிஸ்பென்சரி குவார்ட்டர்ஸ்,
லோரோங் லாலாட் ‡8
7. தி.தி. நாகரெத்தினம், 56, ராபின்சன் ரோடு ‡1

14. பட்டுக்கோட்டை , ஒரத்தநாடு தாலுகா ஆதிதிராவிட முன்னேற்ற சங்கம்
152, ஜாலன் புசார் ‡8
1. திரு. டி.ஏ. தேசிங்கு, ரூம் ‡35, சி.சி.குவார்ட்டர்ஸ் டிப்போ, லோரோங் லாலாட் ‡8
2. திரு.ஓ.நா. சின்னையா, 13, லோராங் லாலாட் ‡8
3. திரு.பி.ஏ.அய்யாதுரை, 15, லோரோங் லாலாட் ‡8
4. திரு.வ.செல்லன் மண்டோர், 14, செட்டி ரோடு ‡8


15. ஜமீ அத் துல் முஸ்லிமின் பி அண்டு சி முட்லூர்
40 கிளினி ரோடு ‡9
1. ஐனாப் கே. ஆர் குலாம் ரசூல் சாஹிப், 40 கிளினி ரோடு ‡9
2. ஜனாப் கே.ஐ. பாட்சா சாஹிப், 40 கிளினி ரோடு ‡9


16. கண்ணுக்குடிக் கிராம முன்னேற்ற சங்கம்
37, எங்கோர் ஸ்திரீட் ‡2
1. ஏ.வைத்தியலிங்கம், 37, எங்கோர் ஸ்திரீட் ‡2
2. திரு.பி. கிருஷ்ணசாமி, 37, எங்கோர் ஸ்திரீட் ‡2
3. திரு. கே. சின்னக்கண்ணு, 144 ஆன்சன் ரோடு ‡2


17. பரவினன் கோட்டை பொதுநலச் சங்கம்
247, விங் லூங் ரோடு ‡17
1. திரு.எஸ்.விசுவலிங்கம் 6, பூன் கெங் ரோடு‡12
2. திரு.எஸ்.ஆர்.கோவிந்தராஜன், 781‡19 விங் லூங் ரோடு, 11 மைல் சாங்கி ரோடு ‡17


18. கோவிலாங்குளம் ஆதித் தமிழர் முன்னேற்ற சங்கம்
130, ஆன்சன் ரோடு‡2
1. ‡‡‡‡‡‡‡ 2. ‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡ 3. ‡‡‡‡‡‡‡‡‡‡‡‡
4. ‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡ 5. ‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡

19. வள்ளுவர் நூல் நிலையம்
130, ஆன்சன் ரோடு ‡2
1.திரு. வ. சுந்தரமூர்த்தி, 24, அப்பர்வெல்டு ரோடு ‡8
2. திரு.வெ.கருப்பையா, 130, ஆன்சன் ரோடு‡2


20. மாயூரம் தாலுகா தமிழர் ஐக்கிய சங்கம்
27, அப்பர் வெல்டு ரோடு‡8
1. திரு.கோ. வீராசாமி, 27, அப்பர் வெல்டு ரோடு‡8
2. திரு.கு. முருகையன், ரூ ‡5, பிளாக் ‡20, யஹண்டர்சன் ரோடு‡3
3.திரு.நா.மு.தம்புசாமி, 27, அப்பர் வெல்டு ரோடு ‡8


21. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தாலுகா ஆதித் திராவிட சங்கம்
221, சையத் அல்வி ரோடு‡8
1. திரு.எஸ்.எம். ரெங்கசாமி, 221,சையது அல்வி ரோடு ‡8
2. திரு.ஓ.ஏ. அம்மைநாதன், 221, சையது அல்வி ரோடு ‡8


22. உள்ளிக்கோட்டைக் கல்விக் கழகம்
42, கிண்டா ரோடு ‡8
1. திரு.பி. ராமகிருஷ்ணன்,42, கிண்டா ரோடு ‡8
2. திரு.டி.மாரியப்பன், 211‡பி லோரோங் 20, கேலாங் ரோடு ‡14


23. இந்து வேளாளர் மகாஜன சங்கம்
26, வெர்டன் ரோடு‡8
1. திரு.நா.ச. ஆனந்தன், 26, வெர்டன் ரோடு‡8
2. திரு.க. அ. வேலு, 26, வெர்டன் ரோடு‡8


24. கரம்பக்குடி திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்
103, ரோவல் ரோடு ‡8
1. வெ.சின்னையா,103, ரோவல் ரோடு ‡8
2. திரு. ஆ. செல்வராசு, 38, கப் ரோடு ‡8
3. திரு.செ. மலையப்பன், 103, ரோவல் ரோடு ‡8

25. சிங்கப்பூர் திராவிட முன்னேற்றக் கழகம்
42, கிண்டா ரோடு ‡8
1. திரு.எஸ்.சிங்காரவேலு,42, கிண்டா ரோடு ‡8
2. திரு.ஆர்.முருகானந்தம், 2, ஸ்டார் லைட் ரோடு ‡8
3. திரு. எம்.கருப்பையா, 41, கேஞ்ஜஸ் அவெனியூ‡3
4. திரு.பி. சோமசுந்தரம், 293, நியூ பிரிட்ஜ் ரோடு ‡2
5. திரு.கே.கே. நாராயணசாமி, 52, வெஸ்ட் ஹில் ரோடு ‡27
6. ஆர்.வீரப்பன், 3, ராபிள்ஸ் பிளேஸ் ‡1
7. திரு.பி.டி.ராசன், 63 , கம்போங் பாரு ரோடு ‡3
8. திரு. எம்.ஏ.சின்னையா, 316 ஜே, டன்னர்ன் ரோடு ‡11
9. ஆர்.பற்குணம்,142, ஜி. ஜாலன் காயூ ‡28
10. திரு.ஒய்.அப்துல் கபூர், 2, ஸ்டார் லைட் ரோடு ‡8
11. திரு.எஸ்.பி. சாரதி, 1048 ‡ஏ 4, சிராங்கூன்ரோடு ‡8

26. நாமக்கல் தாலுகா நலனபிவிருத்திச் சங்கம்
159, ஏ, ஆன்சன் ரோடு‡2
1.திரு.வெ.கோபாலன், 159‡ஏ, ஆன்சன் ரோடு ‡2
2. திரு. கு.கோபால், 159‡ஏ, ஆன்சன் ரோடு‡2
3. திரு.வை.நல்லுசாமி, 1882 வெஸ்ட் ஹில் ரோடு 13.5 மைல் ‡27
4. திரு.செ. பழனிசாமி, 159‡ஏ, ஆன்சன் ரோடு ‡2
5. கா. முத்துசாமி, 3, எஸ்.எச்.பி. குவார்ட்டர்ஸ், ரூம் 2, தஞ்சம்பாகார் ‡ 2

27. கண்டிதம் பேட்டை கல்விக் கழகம்
42, கிண்டா ரோடு ‡8
1. திரு.கே.ராஜு,75. ஹாவ்லக் ரோடு‡1
2. திரு.யூ. வீராசாமி, 42, கிண்டா ரோடு ‡8


28. யாதவ குல சங்கம்
440‡சி, கிளிமென்சியூ அவென்யூ‡9
1. திரு. ஆர்.ராஜகோபால், ராமராஜ் வில்லா, 20, சக்லாப் பிளெயின் ‡15
2. திரு.கே.ராஜாங்கம், 55, தேங் ரோடு ‡9
3. திரு.வே. கோவிந்தராஜு, 97‡இ, ரேடின் மாஸ்‡4

29. நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வர்த்தக சங்கம்
45, தேங் ரோடு ‡9
1. திரு. வயி. சண்முகம் செட்டியார், 38, மார்க்கெட் ஸ்திரீட்‡1
2. திரு.ராம.அரு. அருணாசலம் செட்டியார், 54,மார்க்கெட் ஸ்திரீட் ‡1
3. திரு.மு.சே.சு. பெரியண்ணன் செட்டியார், 36, மார்க்கெட் ஸ்திரீட் ‡1

30. திருவிதாங்கோடு முஸ்லிம் லீக் யூனியன்
176, ஆன்சன் ரோடு ‡2
1. ஜனாப் ஏ. ஷாகுல் ஹமீது, 176, ஆன்சன் ரோடு ‡2
2. ஜனாப் எஸ்.ஏ.கபூர், 356 ஜு சியாட்ரோடு ‡15
3. ஜனாப் ஏ. பக்ருதீன், 1, பப்லோ ரோடு ‡8

31. கடையநல்லூர் முஸ்லிம் லீக்
72, தஞ்சம்பகார் ரோடு ‡2
1. ஐனாப் அ.நா.மைதீன், 116 ரேஸ்கோர்ஸ் ரோடு ‡8
2. ஜனாப் க.அ.உஸ்மான், 116 ரேஸ்கோர்ஸ் ரோடு ‡8
3. ஜனாப் வி.மு.மஸ்கூது, 40, செங் சியோக் ஸ்திரீட் ‡2
4. ஜனாப் என்.கே. ஜலாலுதீன், 117, டிராஸ் ஸ்திரீட் ‡2
5.ஜனாப் எஸ்.ஏ. ஹனிபா,64, தஞ்சம்பகார் ரோடு ‡2

32. தக்கலை மக்காய் முஸ்லிம் சொஸைட்டி
71 ஏ, மார்க்கெட் ஸ்திரீட் ‡1
1. ஐனாப் எம்.கே. பக்ருதின், 845, பாசிர் பாஞ்சாங் ரோடு ‡5
2. எஸ்.பி. ஷாகுல் ஹமீது, 33 தெலுக் ஆயர் மார்க்கெட் ‡1
3. என்.எம்.பக்ருதீன், கஸ்டம்ஸ் குவார்ட்டர்ஸ் காண்டீன், தெலுக்பிளாங்கா ரோடு ‡4

33. தமிழ்க் கலைக் கழகம்
165, சிராங்கூன் ரோடு ‡8
1. திரு.என்.எஸ். சவுந்தரராஜன், தபால் பெட்டி ‡200

34. தமிழ்க் கல்விக் கழகம்
71, சிலிகி ரோடு ‡7
1. திரு. கோ. சாரங்கபாணி, 71, சிலிகி ரோடு ‡7
2. திரு. எஸ்.சி. சோமசுந்தரம், 332, நார்த் பிரிட்ஜ் ரோடு ‡7
3. திரு.ஜி. பெருமாள், 26, கிருபோ ரோடு ‡8
4. திரு.வை. திருநாவுக்கரசு, 125, சிராங்கூன் ரோடு ‡8

35.புதுக்கோட்டை சமஸ்தான தமிழ் இளைஞர் கழகம்
பி. 14‡4‡21, ஜாலான் காயூ ‡28
1. திரு.கே. அடைக்கப்பன், 160 ஜாலான் காயூ‡28
2. திரு.ஆர்.ஏ.பழனிசாமி, 160 ஜாலன் காயூ ‡28

36. முசுகுந்த நாட்டு முன்னேற்றக் கழகம்
279, ரேஸ் கோர்ஸ் ரோடு ‡8
1. திரு. கோ. அருணாசலம், 279, ரேஸ் கோர்ஸ் ரோடு ‡8
2. திரு.இரா.தம்பிஐயன், 279, ரேஸ் கோர்ஸ் ரோடு ‡8

37. மணியம் இலக்கிய மன்றம்
54. பார்க் ரோடு ‡1
1. திரு. கா.குப்புசாமி, 123, எம்.பிளாக், எஸ்.சி.சி. குவார்ட்டர்ஸ், ஹாவ்லக் ரோடு ‡1
2. மா. இராமு, 293, நியூ பிரிட்ஜ் ரோடு ‡2
3. தி.அ. உத்ராபதி, 78 பெர்சிஸ் ஹில் ரோடு‡3
4. திரு. நா.ம. இராசகோபால், 78, பெர்சிஸ் ஹில் ரோடு ‡3
5. திரு. சு.க. சாமியப்பன், 78, பெர்சிஸ் ஹில் ரோடு ‡ 3
6.திரு. தி.அ. துரை, 22, எஸ்.சி.சி. டிபோட் ஜுசியாட் ரோடு ‡15

38. மன்னார்குடி தாலுகா ஆதிதிராவிடர் சமூக நலனபிவிருத்திச் சங்கம்
43, கேனால் ரோடு ‡1
1. திரு. மூ.ப. பச்சைமுத்து, 25,இ, புளாக், உட்லி பில்டர், 3,5 மைல், அப்பர் சிராங்கூன் ரோடு ‡13
2. திரு.ப.நா. முத்துசாமி, நெ.43, கேனால் ரோடு‡1

சிங்கை தமிழ்க் கல்வி வளர்ச்சி மத்தியக் குழு அறிக்கை

சிங்கை தமிழ்க் கல்வி வளர்ச்சி மத்தியக் குழு அறிக்கைதமிழன்பர்களே!

1946 ஆம் ஆண்டு பாரதிதாசன் பிறந்த தின விழாக் குழுவினர்களிடமிருந்த மீதத் தொகை இரு நூறு வெள்ளியைப் பற்றி ஆலோசிப்பதற்காக 18.5.46 இல் கூடிய பொதுக் கூட்டத்தில் தமிழ்க் கல்வி வளர்ச்சிக் கென உபயோகப்படுத்த வேண்டுமென்ற அனைவரின் ஏகோபித்த முடிவின் படி சி.த.க.வ.ம. குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவானது தொழிற்சங்கங்களால் தோற்றுவிக்கப்பட்ட சகல தமிழ்ப்பள்ளிகளை ஒன்று சேர்த்து அந்தந்த கல்விக் குழுவின் தலைவர்களை மத்தியக் குழுவில் அங்கம் பெறச் செய்து, தாய்மொழியாகிய தமிழ் மொழி வளர்ச்சியே தனது குறிக்கோளாகக் கொண்டு தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்க் கல்வியைப் புகட்டி தமிழ்ப் பணியாற்றி வருகின்றது.

இக்குழுவின் சார்பாக தமிழ்க் கல்வி வளர்ச்சிக் கேற்ற காரியங்களை அவ்வப்போது கவனிப்பதற்காக மத்தியசெயற்குழு ஒன்றும் அமைக்கப்பட்டு தமிழ்மொழி வளர்ச்சிக்குரிய திட்டங்களின் படி சகல தமிழ்ப்பள்ளிகளையும் மேற்பார்வை யிட்டுக் கண்காணித்தல் ஆசிரியர்கள், மாணவ மாணவிகளது கல்வி வளர்ச்சிக்கான பாடத் திட்டங்கள் முதலியவையளித்தல், மாணவர்களுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் மற்றும் கல்விக்கான உப கருவிககள் வழங்குதல், ஆசிரியர் கழகம் ஆசிரியர் போதனா முறை வகுப்பு, மாணவர் கழகம் இவைகளமைத்து அறிவு, ஆற்றலுக்கான ஆக்க வேலைகளைச் செய்தல், தமிழ்க் கல்வி அபிவிருத்திக் குரிய அலுவல்களை நிறைவேற்றுவதற்கு, பொது மக்களிடமிருந்து உதவி நிதி திரட்டி மேற்காணும் தமிழ்த் தொண்டு புரிந்து வந்திருக்கின்றது.

மத்தியக் குழுவின் அலுவலர்கள்:

தலைவர் : மு.ரா. குருதேவன்
துணைத்தலைவர் : எம். ஆர். சுப்பையா
செயலாளர் : எஸ்.எம். ராஜகோபால்
துணை செயலாளர் : ம.சி. திருநாவுக்கரசு
பொருளாளர் : வெ. சுப்பையா
கணக்கர் : வீ. கலியாணசுந்தரம்
செயற்குழுவினர்கள் : ச.சா. சின்னப்பனார்
கோ. இராமலிங்கம்
பொ.வெ. வீரமணி
ந. நக்கீரன்
வீ. பொன்னுசாமி

கூட்டங்கள்

மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டு பொதுக் கூட்டங்கள், ஒரு கலைச்சொல்லாக்கக் கண்டனக் கூட்டம், ஒரு தமிழ் கலாசாலை அமைப்பு ஆலோசனைக் கூட்டம், ஐந்து மத்தியக குழுக் கூட்டங்கள், 11 செயற்குழுக் கூட்டங்கள், ஒரு அவசரக் கூட்டம், ஆசிரிய் கழக அமைப்புக் கூட்டம், மாணவர் கழக அமைப்புக் கூட்டம் ஆகிய கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

மேற்பார்வையாளர்
பெரியார் ச.சா. சின்னப்பனார் அவர்கள் சகல தமிழ்ப்பள்ளிகளின் மேற் பார்வை யாளராக நியமனம் பெற்று அரசாங்க கல்வி இலாகாவின் அங்கீகாரத்தையும் கொண்டு மத்தியக் குழுவின் நிதியிலிருந்து சிறிது ஊதியம் பெற்று மத்தியக் குழுவின் மேற்பார்வையிலுள்ள பள்ளிகளைக் கண்காணித்தும் , மத்தியக் குழுவுடன் இணைப்பதற்கும் தமிழ்மொழி வளர்ச்சியுறுவதற்குரிய அரும்பெரும் சேவைகளைச் செய்து வருகிறார் என்பதையும் அறிவித்துக் கொள்கிறோம்.

பொருளாதார நிலைமை
தமிழ் மொழிக்கான பல காரியங்களை நிறைவேற்றுவதற்கு மத்தியக் குழு பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தமையால் தீபாவளி, தைப்பூசம் மற்றும் இதர விழாக்களிலும் ஏனைய பொதுக் கூட்டங்களிலும் மாணவ, மாணவிகளைக் கொண்டு பூ விற்பனை செய்து மத்தியக் குழுவிற்குப் பொருள் திரட்டப் பட்டது.

பள்ளிக் கூடங்கள்
மத்தியக் குழுவின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் 30 பள்ளிக் கூடங்களில் பயின்றுவரும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் , உப பாடப்புத்தகங்கள், நோட் புத்தகங்கள், எழுதுகோல் ஏனைய கல்விக்குரிய உப கரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்காணும் பள்ளிகளில் மத்தியக் குழுவின் முயற்சியால் 7 பள்ளிக் கூடங்கள் அரசாங்கக் கல்வி இலாக்காவால் பதிவாக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய பள்ளிக் கூடங்கள் சுகாதார அமைப்புமுறை சீராக்கப்பட்டதும் கூடிய விரைவில் பதிவாக்கப்படுமென்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அன்றியும் மத்தியக் குழுவின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இரவு பாடசாலை களில் பயின்று வருபவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

சிங்கப்பூர் தமிழ்க் கல்வி வளர்ச்சி மத்தியக் குழுவின் மேற்பார்வையிலுள்ள மொத்த தமிழ்ப் பள்ளிக் கூடங்கள்:
பெரியார் ஈ.வெ.ரா. சமதர்ம தமிழ்ப் பாடசாலை 1 26 17 43
வாசுகி தமிழ்ப் பாடசாலை 1 28 18 46
வள்ளுவர் பாடசாலை (பதிவுற்றது) 2 38 32 70
தாலமுத்து பாடசாலை (பதிவுற்றது) 1 17 23 40
பாரதிதாசன் பாடசாலை (பதிவுற்றது) 2 56 26 82
மறைமலையடிகள் பாடசாலை 1 15 13 28
சிங்கார வேலனார் பாடசாலை 2 39 34 73
தங்கமணி பாடசாலை 2 44 48 92
அரவிந்தர் பாட சாலை (பதிவுற்றது) 2 44 33 77
பகவத்சிங் பாடசாலை 1 19 24 43
கலைமகள் பாடசாலை (பதிவுற்றது) 2 29 39 68
அருணா பாடசாலை 1 22 12 34
ஈ.வெ.ரா. தமிழ்பாடசாலை
(அ) ஏர்பேஸ் 2 81 47 128
(ஆ) 1 26 23 49
ஜீவானந்தம் பாடசாலை (பதிவுற்றது) 1 30 23 53
காளமேகம் பாடசாலை 1 17 9 26
நீலாம்பிகை பாடசாலை 3 95 73 168
நாகம்மையார் பாடசாலை 1 24 12 36
மோகன் குமாரமங்கலம்
பாடசாலை (பதிவுற்றது) 1 16 15 31
கண்ணம்மாள் பாடசாலை 1 12 10 22
சிதம்பரனார் பாட சாலை 1 26 17 43
சுகந்திரோதயம் பாடசாலை 1 12 19 31
மங்கம்மாள் பாடசாலை 1 16 13 29
புகழேந்தியார் பாடசாலை 1 16 11 27
உமார்ப்புலவர் பாடசாலை 1 34 23 57
மறுமலர்ச்சி பாடசாலை 1 11 13 24
கம்பர் பாடசாலை 1 30 32 62
இராமமூர்த்தி பாடசாலை 1 29 13 42
பாரதியார் பாடசாலை 1 12 13 25
பன்னீர்செல்வம் பாடசாலை 1 12 9 21
மொத்தம் 39 876 694 1570

மாணவர் மகாநாடு
மத்தியக் குழுவின் முயற்சியாலும் சகல கிளைக் கல்விக்குழுவினர்களின் ஒத்துழைப்போடும் தொழிற்சங்கங்களின் ஆதரவுடனும் மலாயாவிலேயே என்றுமே கண்டிராத (முதல் மாணவர் மகாநாடு) வகையில் தமிழ் மாணவர்களால் தைத் திங்கள் ஏழாம் நாள் (19.1.1947 இல்) தொழிற் சங்க சம்மேளனத்தில் திரு. மெ. சிதம்பரம் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மேலும் ஒவ்வொரு ஆண்டிலும் தைத் திங்கள் முதலாம் நாளன்று மாணவர் மகாநாடு நடத்தப்பட வேண்டுமென்ற தீர்மானித்ததற்கிணங்க இவ்வாண்டிலும் இரண்டாவது மாணவர் மகாநாட்டை நடத்துவதற்கு சகல ஒத்துழைப்பும் நல்குவீர்களென்று நம்புகிறோம்.

மாணவர் கழகம்
சகல பள்ளி மாணவ மாணவிகளைக் கொண்டு 9.3.1947 இல் சிங்கை தமிழ் மாணவர் கழகம் நிறுவப்பட்டு, அக் கழகத்தின் மூலம் அற நெறிகளும், பேச்சுப் பயிற்சி, பாட்டுப் பயிற்சி முதலியவைகளும் அறிவு வளர்ச்சிக்கான போதனைகளும் நடத்தப்பட்டு வருவதோடு, தமிழ்ப் பாடல்களில் தேர்ச்சி யடைந்துள்ள மாணவ மாணவிகளுக்கு சிங்கப்பூர் வானொலி வாயிலாக பயிற்சியளிக்கப்பட்டும் வருகின்றன.

ஆசிரியர் கழகம்
சகல பள்ளி தமிழ் ஆசிரியர்களைக் கொண்ட சி.த. ஆசிரியர் கழகம் 23.4.47 அமைத்து அக்கழகத்தின் மூலம் அறிவுக்குப் பொருத்தமற்ற பாடங்களையகற்றி, பகுத்தறிவு வளர்ச்சிக்குரிய பாடங்களைத் தயாரித்து மாணவர்களுக்குப் போதித்தும், மத்தியக்குழுவின் முயற்சியிலும், அரசாங்க கல்வி இலாக்காவின் ஆதரவி லும் மேற்படி கல்வி இலாக்கா பரிசோதகர் திரு. ஜே.பி. அப்பாதுரை அவர்களின் மேற்பார்வையில் ஆசிரியர்களின் போதனா முறை வகுப்பும் 1.10.47 இலிருந்து நடைபெற்று வருகின்றது.

எதிர்கால வேலைத் திட்டங்கள்
மத்தியக் குழுவுடன் இணைக்கப்பட்ட சகல பள்ளி, மாணவ, மாணவிகளுக்கும் ஒரே மாதிரியான உடைகள், சின்னங்கள் (பேட்ஜ்கள்) அளித்தல், தமிழ் மாணவ மலர் என்ற மாத வெளியீட்டின் மூலம் மாணவர்கள் முன்னேற்றத்திற்கான கல்வி முறைகளை உணர்த்துதல் பள்ளிகள் அமையாத இடங்களில் பள்ளிகளமைத்தல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை வசதியோடு தமிழ்க் கல்வியைப் புகட்டுதல், மாணவ மாணவிகளுக்கு உயர்தரக் கல்வியை அளிக்கக் கூடிய வசதிகளைச் செய்தல், ஆசிரியர்களுக்கு போதனா முறைப் புத்தகங்கள் இலவசமாக விநியோகித்தல் ஆகிய வேலைகளைத் துரிதமாகச் செய்வதற்கு தமிழபிமானிகளையும் மத்தியக் குழுவில் அங்கம் பெறச் செய்து, அவர்களின் ஆதரவோடு நடைமுறையில் கொண்டுவரலாமென எதிர்பார்க்கிறோம்.

வேண்டுகோள்
தமிழபிமானிகளே!
சி.த.க.வ.ம.குழு, குறுகிய காலத்திற்குள் தாய்மொழியை ஆரம்பக் கல்வியாக தமிழ்க் குழந்தைகளுக்குப் புகட்டி தமிழ்ப்பற்றும், தமிழ் உணர்ச்சியும் ஊட்டியதன் வாயிலாக இன்று தமிழர் சமுதாயத்தில் ஒரு வித புத்துணர்ச்சி உண்டாகி, வருங்காலத்தில் தமிழர்கள் தலைசிறந்து விளங்குவதற்குரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு மென்மேலும் தமிழ்க் குழந்தைகளின் கல்வி அறிவு வளர்ச்சி பெறுவதற்கும், தமிழ்க் கலை தழைத்தோங்குவதற்கும் தமிழ் சமுதாய மேம்பாட்டிற்கும் எதிர்கால வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்று வதற்கும் தமிழ்ப் பெருமக்கள் தங்கள் கடமையை உணர்ந்து தங்களாலியன்ற தகுந்த ஒத்துழைப்பும் பொருளுதவியும் அளிக்குமாறு வணக்கத்துடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி செலுத்துதல்
மத்திய குழுவுடன் சகல காரியங்களிலும் பங்கு பெற்று பூரண ஒத்துழைப்பளித்த கிளைக் கல்விக் குழுவினர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் தொழிற்சங்கத்தார்களுக்கும், சிங்கை திராவிட கழகத்தார்களுக்கும், மத்திய குழுவிற்கு எவ்வித வாடகையுமின்றி இடவசதியளித்த சிங்கை தமிழ் நூல் நிலையத் தார்கட்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.

தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு அவ்வப்போது நிதியளித்துள்ள பொது மக்களுக்கும் தனித்த முறையில் நன்கொடை வழங்கியுள்ள தமிழ் அபிமானிகளுக்கும் முதல் மாணவர் மகாநாட்டின் போவர இடவசதியளித்த தொழிற்சங்க சம்மேளனத்தார் களுக்கும் குறிப்பிட்ட இரண்டு தமிழ்ப் பள்ளிக் கட்டடங்களை சீர்ப்படுத்துவதற்குப் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழ் அபிமானிகளான திரு.எம்.கே. சிதம்பரம், கோ. சாரங்கபாணி ஆகியவர்களுக்கும் எங்களது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.மத்தியக் குழுவின் நிகழ்ச்சிகளை அவ்வப்போது பத்திரிகைகளில் பிரசுரித்துதவி புரிந்த தமிழ் முரசு மலாயா நண்பன் ஏனைய உள்ளூர், வெளியூர் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் எங்களது உளமிக்க நன்றி உரித்தாகுக.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க் கலை!!

இங்ஙனம்
சி.த.க.வ.ம. குழுவின் சார்பாக தங்களன்பன்
எஸ்.எம்.இராஜகோபால்
செயலாளர்
சிங்கப்பூர்
28.12.1947

கால் நூற்றாண்டுக்கு முன் நிகழ்ந்தது

கால் நூற்றாண்டுக்கு முன் நிகழ்ந்தது

1929 இல் பெரியார் இராமசாமி மலாயாவில் சுற்றுப் பயணம் செய்த விவரங்களை மலாயாப் பெரியார் அ.சி. சுப்பையா கூறுகிறார்....

மலாயாவில் முதன் முதலில் அகில மலாயாத் தமிழர் மகாநாடு ஒன்று கூட்ட வேண்டுமென்றும், அதற்குப் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களை வரவழைத்து மகாநாட்டை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொள்வதென்றும் நானும் சில சீர்திருத்த ஆர்வங்கொண்ட தோழர்களும் தீர்மானித்தோம். அதன்படியே பெரியாருக்குக் கடிதம் எழுதிக் கேட்டிருந்தோம். அதற்கு அவரும் தம் மனைவி யாருடனும் நாலைந்து தோழர்களுடனும் வருவதாக எழுதியிருந்தார். அதன்படியே மகாநாட்டை ஈப்போ நகரத்தில் கூட்டுவதாகத் தீர்மானித்து அதற்காக வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டு முன்னேற்றம் பத்திரிகையிலும் பிரசரித்திருந்தோம்.

இதைக் கண்ணுற்ற கோலாலம்ப்பூர் தமிழ்நேசன் பத்திரிகையானது ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பெரிய நாஸ்திகரென்றும் அவர் மலாயாவிற்கு வந்தால் பொது ஜனங்களுக்குள் கிளர்ச்சியும் கலவரமும் ஏற்பட்டு விடுமென்றும், ஆதலால் பினாங்கில் அவரை இறங்கவிடாதபடி அப்படியே திருப்பி அனுப்பி விடவேண்டுமென்றும் எழுதியது. அதோடு மட்டும் நில்லாமல் பினாங்கிலிருந்து சில வைதீகப் பத்திரிகைகளும் தமிழ் நேசனைப் பின்பற்றி எழுதியதிலிருந்து சில பிற்போக்காளர்களும், துண்டு பிரசுரங்களடித்து பினாங்கு நகர முழுவதும் பரவச் செய்து விட்டார்கள். இதைக் கேள்வியுற்ற எனக்கு மிகுந்த ஆத்திரமும் கவலையும் மூண்டு விட்டது. உடனே எனது தோழர்களாகிய திரு. கோ.சாரங்கபாணி, காலஞ்சென்ற கா. தாமோதரனார், திரு.கோ. இராமலிங்கம் ஆகிய நாங்கள் நால்வரும் கூடி ஆலோசனை செய்து எப்படியாவது நாம் அவர்களைக் கப்பலைவிட்டு இறக்கிக் கொண்டு வந்து விட வேண்டுமென்று முடிவு செய்தோம். அதன்படி மறுநாள் காலையில், நாலு மணிக்கெல்லாம் கிட்டா கப்பலிலேறி பினாங்கு போய்ச் சேர்ந்தோம்.

அங்கு போய்ச் சேர்ந்தவுடன் எங்களுக்கு பழக்கமான சுவாமி அற்புதாநந்தா அவர்களைச் சந்தித்து அவர் மூலமாக இந்தியா ஏஜண்டு ஜனாப் எஸ்.கெச். அப்துல் காதர் சி.பி.இ. அவர்களின் உதவியால் பினாங்கு கரையிறங்காமல் வைத்திருந்தவர்களையயல்லாம் உடனடியாக இறக்கிவிடும் படி போலிஸ் கமி­னருக்கு அறிவிக்கவும், அவர்களும் உடனே இறக்கிவிடும்படி கப்பல திகாரிகளுக்கு அறிவிக்கவும் அவர்களும் அதன்படி 20.12.29 காலை 10 மணிக்கெல்லாம் எல்லோரும் கப்பலை விட்டு கரைக்கு இறங்கி வந்தார்கள்.
பெரியாருடன் வந்தவர்கள் அவர் மனைவி திருமதி நாகம்மையார், திருவாளர்கள் எஸ்.இராமநாதன், அ.பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார், சி. நடராஜன், சொக்கலிங்கம், என்.பி.காளியப்பன் முதலியோர்கள் வந்திறங்கினார்கள். அவ்வமயம் பினாங்கு துறைமுகத்தில் 5000 மக்களுக்கு மேல் கூடிவிட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் பெரியாரை கரையிறங்க விடாமல் திருப்பி அனுப்பிவிடும்படி எதிரிகள் செய்த பிரசாரம்தான் என்று பொது மக்களிடையே என்றுமில்லாத ஓர் உணர்ச்சியை உண்டாக்கி விட்டது.
அதன்பிறகு அன்று மாலையே அதை விட்டுப் புறப்பட்டு, கோலப்பிறை, கோலக்கங்சார் முதலிய ஊர்களுக்குச் சென்று விட்டு 23.12.29 இல் ஈப்போ வந்து சேர்ந்தோம். அங்கேதான் தமிழர் மகாநாடு நடந்தது. அந்த மகாநாட்டுக்கு ஜனாப் டாக்டர் முகம்மது கெளஸ் ஜே.பி. அவர்கள் தலைமை தாங்கினார். திரு. ஆர்.ப. கிருஷ்ணன், மகா நாட்டுக் கொடியை ஏற்றுவித்தார். நான் மாட்சிமை தாங்கிய மன்னர்பிரான், ராணியாரின் படங்களைத் திறந்து வைத்தேன். பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் மகாநாட்டைத் திறந்து வைத்தார். மகாநாட்டு நிகழ்ச்சிகளெல்லாம் முடிந்தவுடன் அங்கு இரண்டொரு நாள் தங்கியிருந்து அதன் பிறகு பினாங்கு, கோலாலம்பூர், தைப்பிங், மூவார், ஜோகூர், பத்துபகாட், மலாக்கா, தம்பின், கோலப்பிறை, கோலாகுப்பு, தஞ்சோங் மாலிம், சுங்கை குருட், தெலுக்கான்சன், கம்பார், கோலக்கங்சார் சுங்கைப்பட்டாணி முதலிய ஊர்களெல்லாம் சுற்றிக் கொண்டு ஆங்காங்கு நடந்த வரவேற்புக் கூட்டங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் சமூகமளித்து விட்டு கடைசியாய் பெரியாரும் நாங்களும் சிங்கப்பூர் வந்து சேர்ந்தோம்.

பெரியார் வருவதைத் தெரிந்த கொண்ட பொது மக்கள் தேங் ரோட் ரயில்வே ஸ்டேசனில் ஏராளமாகக் கூடி விட்டார்கள். பெரியார் வரவேற்புக் கமிட்டிக்கு தலைவராக இருக்கும்படி திரு. உ. இராமசாமி நாடார் ஜே.பி. அவர்களைக் கேட்டுக் கொண்டதற்கு முதலில் அவரும் சரி யயன்று ஒப்புக்கொண்டார். கடைசியில் பினாங்கு நாடார் மகாஜன சங்கத்தார், நாடாரை வரவேற்புக் கமிட்டியில் கலந்து கொள்ள வேண்டாமென்று அவருக்கு கடிதம் எழுதினார்கள். அதை முன்னிட்டு அவரும் மறுத்தார். ஆனால், ஈப்போ முதலிய சுற்றுப்பட்ட ஊர்களில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிகளையும், அகில மலாயா தமிழர் மகாநாட்டின் திறப்புவிழா வைபவத்தைப் பற்றியும் பத்திரிகையில் பார்த்த பிறகுதான நாடாருக்கும் மனமாற்றம் ஏற்பட்டு, தேங் ரோட் ரயில்வே ஸ்டே­னில், பெரியாரை வரவேற்பதற்காக வேண்டி புதிதாக ஒரு பெரிய கார் ஒன்று வாங்கிக் கொண்டு வந்து பெரியாருக்கும் நாகம்மையாருக்கும் மாலை சூட்டி எல்லோரையும் காரில் அழைத்துக் கொண்டு வந்து அவர் வீட்டில் இறக்கினார்.

அதன் பிறகு பெரியார் சிங்கப்பூரை விட்டு தாய் நாடு போகிற வரையில் தஞ்சோங் காத்தோனில் உள்ள இராமசாமி நாடாரின் பங்களாவில் தான் தங்கியிருந்தார்கள். தங்கியிருந்தது மட்டுமல்லாமல் அவர்களுக் கெல்லாம் சாப்பாடு முதலிய சகல வசதிகளையும் செய்து கொடுத்திருந்தார். அதன் பிறகு இச் சிங்கையில் பல விடங்களிலும் பொதுக்கூட்டங்களும் வரவேற்புகளும் பல சங்கங்களின் சார்பாகவும் பொது மக்களின் சார்பாகவும் நடந்தேறின. அதில் நானும் அகம்படியார் மகாஜன சங்கத்தின் சார்பாக நியூ வோர்ல்ட் தியேட்டரில் திரு.ஐ.ஐ. முதலியார் நாகலிங்கம் ஜே.பி. அவர்களின் தலைமையில் ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்தேன். அதன்பிறகு பெரியாரும் பெரியாருடன் வந்திருந்தவர்களும் நானும் தோழர்களாகிய கோ. சாரங்கபாணி உ. இராமசாமி நாடார், கோ. இராமலிங்கம், வே.நாரயணன் ஆர்.டி. கோவிந்தசாமி நாயுடு முதலியவர்களுடன் இருந்து ஒரு குருப் போட்டோ எடுத்துக் கொண்டு பெரியாரை 16.1.30-ல் தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்தோம்.

அ.சி. சுப்பையா மறைந்தார்

திரு.அ.சி. சுப்பையா அவர்களின் சடலம் தகனம் செய்யப்பட்டது
சிங்கப்பூர் தமிழ்ப் பிரமுகர்களில் ஒருவரும், சமூக சீர்திருத்த சேவையாளரும், பல சங்கங்களை ஸ்தாபித்தவரும் மலாயாவில் பிரசித்திப் பெற்ற காந்தரசம் கம்பெனியின் சொந்தக்காரரும், அறிஞரும், நூலாசிரியருமான திரு. அ.சி. சுப்பய்யா அவர்களின் சடலம் நேற்று மாலை (15.10.55) பட்டாடாரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. திரு. சுப்பய்யா அவர்கள் சென்ற வியாழக்கிழமை நள்ளிரவிற்குப் பின் மயக்கமுற்றுப் படுத்தவர் பிரக்ஞை தெரியாமல் வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணிக்கு அமைதியாக உயிர் நீத்தார்கள். திரு. சுப்பய்யா அவர்கள் தம் மனைவியார் திருமதி. அஞ்சலையம்மாள் அவர்கள் மரணமுற்ற 21 ம் தினத்தில் இறந்து விட்டார்கள்.

நேற்று நடந்த தகனத்திற்கு நகரப் பிரமுகர்களும், உறவினர்களும், நண்பர்களும், ஐந்நூறுக்கு மேலாக வந்திருந்தனர். சுடுகாட்டிற்கு வந்து அஞ்சலி செய்வீர்களா என்று கேட்ட தாத்தாவிற்கு வாக்குறுதி அளித்திருந்த மகளும் பேத்திகளும், அவரின் குடும்பத்தினர்களும் தகனத்திற்கு வந்திருந்தனர்.

திரு. சுப்பய்யா அவர்களின் வாழ்க்கையின் சில குறிப்புகளைக் கூறி அப்பெரியாரின் ஆத்ம சாந்திக்கு இரு நிமிடங்கள் மெளனப் பிரார்த்தனை செய்யும்படி அவரின் குடும்பத்தினரின் சார்பில் திரு.கோ.சாரங்கபாணி அவர்கள் கேட்டுக் கொள்ள யாவரும் பிரார்த்தனை செய்து கொண்ட பின், தந்தையின் பிரேதத்திற்கு தனயன் தீயிட்டார்.

அநுதாபக் கூட்டம்
23.10.55 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு சிங்கப்பூர் ரேஸ்கோர்ஸ் லேனிலுள்ள காந்தி ஞாபகார்த்த மண்டபத்தில் 14.10.55 இல் சிங்கப்பூரில் காலமான திரு.அ.சி. சுப்பையா அவர்களுக்கு அநுதாபக் கூட்டம் நடைபெறும். அநுதாபிகள் அனைவரையும் கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.
காரியதரிசி, தமிழர் சீர்திருத்தச் சங்கம்.


14.10.55 இல் மறைந்தார் அ.சி.சுப்பையா

மறைந்த பொதுநலப் பணியாளர்

அ.சி.சுப்பையாவுக்கு அநுதாபம்

அவரின் எண்ணங்களை நிறைவேற்றி வைக்க ! தலைவர் சாரங்கபாணி.

சுப்பையாவின் தன் முயற்சி பற்றிப் பலர் பேச்சு

மலாயாத் தமிழர்களிடையே சீர்திருத்த நற்பணி புரிந்த செம்மல் திரு.அ.சி. சுப்பையா அவர்களின் மறைவு குறித்து முந்தாநேற்று இங்குள்ள காந்தி நினைவு மண்டபத்தில் அநுதாபக் கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழர் சீர்திருத்தச் சங்க ஆதரவில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு திரு.கோ. சாரங்கபாணி அவர்கள் தலைமை வகித்தார்கள். திரு.அ.சி. சுப்பையா அவர்களின் மறைவு தமிழருக்கொரு பெரும் நஷ்டம் என்று வருந்திக் கூறினார்.

மலாயாவில் பல சங்கங்கள் உருவாகக் காரணமாக முன்னின்று உழைத்தும், உதவியும், தமிழர் சீர்திருத்தச் சங்கத்தை நிறுவியவருள் ஒருவராக இருந்ததோடு சங்கம் அமைந்ததுமே உப தலைவராகவும், நீண்ட காலத் தலைவராகவும், ஆலோசகராகப் பணியாற்றியும் ஈப்போவில் அகில மலாயா தமிழர் மகாநாடு கூட்ட முன்னிருந்து பாடுபட்டும் பொதுத்துறை பலவற்றில் பங்கு கொண்டார் என்றும், அவரின் காலஞ் சென்ற மனைவியாருடன்தான் எங்கு போனாலும் எங்கு வந்தாலும் வேளாவேளைக்கு வீடு வந்து உணவுண்பார் என்றும் அவரின் வாழ்வு உழைப்பவருக்குப பலன் உறுதி என்பதைக் காட்டுகிறது என்றும் தலைவர் திரு.கோ.சாரங்க பாணி உரைத்தார்.

தன் முயற்சியின் உருவாய் இருந்த அவரின் கைப்பட எழுதிய அவரின் வாழ்க்கை வரலாறு டிசம்பர் 15 ந் தேதியாகிய அவரின் பிறந்த நாளன்று வெளியிடப் படும் என்றும் கூறினார்.
திரு.அ.சி.சுப்பையா பொருளுதவியும், ஆலோசனை உதவியும் தந்த வாழ்ந்தவர் என்று அரின் அநுதாபக் கூட்டத்தில் பேசிய திரு.நா.கோ.வீரையா கூறினார்.
தெய்வத்தாலாகாதெனினும் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்ற குறளின் இலக்கணமாய் திகழ்ந்தவர் அ.சி. சுப்பையா என்றும், அவரின் ஆத்ம சாந்திக்கு அவருடைய எண்ணங்களை நிறைவேற்ற அவரின் உறவினர்கள் முன்வந்து உழைக்க வேண்டும் என்றும் அடுத்துப் பேசிய ச.சா. சின்னப்பனார் கூறினார்.

நற்பணியாற்றிய சுயமரியாதைத் தமிழர் அ.சி. சுப்பையா என்று கூறிப் பாராட்டிய திரு. செ. நடராஜன், சுப்பையா தமிழர் சீர்திருத்தச் சங்கத்திற்குச் செய்த சேவைப் பற்றிப் பேசினார். அடுத்து திரு.அ. முருகையன் பேசினார்.

கீழ்வரும் தீர்மானம் தலைவர் அவர்களால் படிக்கப்பட்டு 2 நிமிட நேர மெளனத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்டது.

தமிழர் சீர்திருத்தச் சங்கம் நிறுவவும், நல்ல வகையில் உருவாகவும் உழைத்து அதன் நீண்ட காலத் தலைவராகவும் ஆலோசகராகவும் இருந்தும்,மலாயாத் தமிழர்கிடையே பல துறைகளில் சீர்திருத்தச் செம்மலாயிருந்தும், சீரிய பணியாற்றியவரும், எழுத்தாளரும், நூலாசிரியரும், அறிஞரும், சிங்கப்பூர் காந்தரசம் கம்பெனி உரிமையாளருமாகிய திரு.அ.சி. சுப்பையா அவர்கள் 14.10.55 வெள்ளிக்கிழமை யன்று காலமானது குறித்தும் அதற்கு 21 தினங்கள் முன்பாக அவர்களின் மனைவியார் திருமதி அஞ்சலை அம்மாள் அவர்கள் காலமானது குறித்தும் இக் கூட்டம் தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் பிரிவு தாளாமல் வருந்தும் உற்றார், உறவினர் ; நண்பர்கள் ஆகியோருக்கு இக் கூட்டம் தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மான நிறைவேற்றத்துக்குப் பின் தலைவர் தம் முடிவுரையில், இறந்தவரின் எண்ணங்களை இறக்க வேண்டியவர்களாகிய நாம் நல்ல வகையில் செயலாற் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

த.சீ.சங்கக் கட்டிடம் புதுப்பிக்கப்பட திரு. சுப்பையா உறுதி கூறி, பிளானிலும் கண்ட்ராக்டிலும் கையயழுத்திட்டது பற்றியும் தலைவர் எடுத்துரைத்தார்.
இறுதியாக அநுதாபக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் பேசியவர் களுக்கும் முன்னின்றவர்களுக்கும் நன்றி கூறிய திரு. அ.சி. சுப்பையாவின் புதல்வர் திரு. எஸ்.வி. லிங்கம் கூறியதாவது:-

என் தந்தை தமிழர் சீர்திருத்தச் சங்கத்தைப் புதுப்பிக்க வாக்களித்தபடி இன்னும் 10000 வெள்ளி கொடு பட இருக்கிறது. அதனைத் தமது இதர உறவினர்களும் ஒத்து வந்தால் தந்து நிறைவேற்றி வைப்பேன் என்று உறுதி சொன்னார்.

சிங்கை பெருங்கிழார் சுப்பையாவுக்கு 74 வது பிறந்த நாள்

சிங்கை பெருங்கிழார் சுப்பையாவுக்கு 74 வது பிறந்த நாள் கொண்டாடினர்

தமிழர் சீர்திருத்தச் சங்கம் அளித்த விருந்து

சீர்திருத்த விதை இங்கு ஊன்றச் செய்த அவர் வாழ்க என வாழ்த்து

தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் ஆலோசகரும், சங்கம் இங்கு நிறுவப்பட்டு பணியாற்றக் காரணமானவரும் பெருங்கிழாருமான திரு.அ.சி. சுப்பையா அவர்களின் 74 வது பிறந்தநாளைக் கொண்டாடு முகத்தான் திரு. அ.சி. சுப்பையா, திருமதி அஞ்சலை சுப்பையா ஆகிய இருவருக்கும் நேற்று மாலை அடெல்பி ஹோட்டலில் சங்க அங்கத்தினர்களின் சார்பில் ஒரு தேநீர் விருந்து நடத்தப்பட்டது.

அடெல்பி ஹோட்டலில் மாடிப்படி ஏறிச்செல்லமுடியாத நிலையில் திருமதி அஞ்சலை சுப்பையா அவர்கள் இருந்தும் கூட, அன்பர்கள் அழைப்புக்கிணங்கி வந்தது பாராட்டத்தக்கது.
விருந்திற்குப் பிரமுகர்களும் சங்க நிர்வாகிகளும் அங்கத்தினர்களும் சமாதான நீதிபதிகளும் வந்திருந்தார்கள்.

தேநீர் விருந்திற்குப் பின் த.சீ.சங்கத் தலைவர் திரு.கோ. சாரங்கபாணி அவர்களால் திரு. அ.சி. சுப்பையா அவர்களுக்குப் மலர் மாலை அணி விக்கப்பட்டது. பின்னர் திரு.அ.சி. சுப்பையா அவர்கள் சங்கச் சார்பில் தரப்பட்ட இன்னொரு மலர் மாலையைத் தம் இல்லக் கிழத்தியார் அஞ்சலைக்குச் சூட்டினார்.

சங்க அங்கத்தினர்கள் சார்பில் வாழ்த்துப் பத்திரம் ஒன்றைச் சங்கத் தலைவர் திரு. கோ.சாரங்கபாணி அவர்கள் வாசித்துத் தம்பதி இருவரிடமும் அளித்தார்கள். திரு.அ.சி. சுப்பையாவின் 74 வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் தங்களின் அன்பளிப்புகளைப் பலரும் வழங்கி னார்கள்.

திரு.அ.சி. சுப்பையாவை வாழ்த்திப் பலர் பேசினார்கள்.

முதலில் பேசிய திரு. வீராசாமி, சீர்திருத்தத்தை வீட்டிலும் வெளியிலும் நல்லமுறையில் இதுவரை கடைப்பிடித்து வருபவர் திரு.அ.சி. சுப்பையா. அவர்கள் வாழ்க என்று கூறினார்.
அடுத்துப் பேசிய இந்தியன் டெய்லி மெயில் உதவி ஆசிரியர் திரு. செல்வகணபதி, திரு. அ.சி. சுப்பையா வின் சீர்திருத்தத் தொண்டு தமிழர் சமுதாயம் அறிந்த ஒன்று ; அவர் மேலும் பல்லாண்டு வாழ்ந்து வளம்அடைய வேண்டுகிறேன் என்று கூறினார்.
மூன்றாவதாகப் பேசிய திரு.ஆ.சு.இராமலிங்கம், பிணி போக்க மருந்தும் அறியாமை போக்க சீர்திருத்தக் கல்வியும் தந்து பிற்போக்குக் கருத்துக்களை மலாயாவில் முறியடித்த பெரியார் திரு.அ.சி. சுப்பையா என்று கூறினார்.

அடுத்துத் தமிழர் சீர்திருத்தச் சங்க நிர்வாக உறுப்பினர் திரு. அ. லட்சுமணன் பேசினார். சீர்திருத்தத்தை மலாயாவில் வேரூன்றச் செய்தவர் திரு.அ.சி. சுப்பையா என்பது மறைக்கவோ மறக்கவோ முடியாத உண்மை என்று பாராட்டினார். மேலும் சொன்னார் :‡
திரு.அ.சி. சுப்பையாவும் திருமதி அஞ்சலையும் முன்பு மலர் மாலையுடன் மணநாளன்று இருந்திருப்பர். இன்று 74 வயதினர் அவரும் , 64 வயதினராகிய அம்மையாரும் மலர்மாலையுடன் இருக்கக் கூடிய காட்சி மகிழ்ச்சி தருகிறது.

திரு.உ.இராமசாமி நாடார் அளித்த சங்கக் கட்டிடம் சிராங்கூன் ரோடிலிருக்கிறது என்றும் ஆனால் அது பழுதுற்றுக் கிடக்கிறது என்றும் சமுதாயம் நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திரு.அ.சி. சுப்பையா புதுப்பித்துத் தந்தால் தமிழர் மனக்கோவிலில் அவர் இடம் பெற்று நீடு வாழ்வார் என்றும் மேலும் லட்சுமணன் கூறினார்.
அடுத்து திரு. அ.இ.அகமது பேசினார், 1929‡இல் பெரியார் ஈ.வெ.ராமசாமி பினாங்கு சென்று பெரியார் இங்கு விஜயம் செய்ய வழி உண்டாக்கிச் சீர்திருத்தம் இந்நாட்டில் நிலை பெறச் செய்ய வழிகோலியவர் திரு.அ.சி. சுப்பையா என்று கூறினார்.
அடுத்து திரு. வீரமணி பேசினார்:-

திரு.அ.சி. சுப்பையா அவர்கள் சிங்கப்பூரில் பிறந்து 10 வது வயதில் இந்தியா சென்று, தாம் கருத்துக் கொண்ட அஞ்சலை அம்மையாருடன் சிங்கை வந்து திருமணம் செய்து கொண்டார் என்றும் சிற்பம், சித்திரம் முதலிய கலைத் தொழில் கொண்டும், காந்தரசம் என்ற மருந்து தயாரிப்பின் மூலமும் உயர்ந்து இன்று ஒரு பெருநிலை அடைந்தார் என்றும் கூறி அவரின் வாழ்க்கையைச் சுருங்க எடுத்துரைத்தார்.

வாழ்த்துரைகட்கும், சங்கத்தின் உபசரிப்புக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பேசிய திரு.அ.சி. சுப்பையா அவர்கள் தம் சார்பிலும் தம் மனைவியார் சார்பிலும் சங்க அங்கத்தினர்களின் அன்பின் பெருக்கத்துக்குத் தம் மனமுவந்த நன்றியைத் தெரிவித்து மேலும் சொன்னதாவது:-

தமிழர் சீர்திருத்தச் சங்கம் 1932 உற்பத்தியாயிற்று. அப்போது அதன் முதல் தலைவர் திரு.ஐ.ஐ.முதலியார் நாகலிங்கம் ஜே.பி. ஆவார். அதன் உப தலைவராக நான் இருந்தேன். அப்போதைய காரியதரிசி திரு. கோ. சாரங்கபாணி.
சங்கம் 1935 வரை 8, கிந்தா ரோடில் இருந்தது. பின்னர் 20 கிள்ளாங் ரோடிற்கு வந்தது. இதுவரை பல சீர்திருத்தப் பணிகளைத் தமிழர் சமுதாய நலனுக்காக ஆற்றியுள்ளது. த.சீ.சங்கத்திற்குத் தனி இல்லம் தேவை என்ற பொறுப்பு ணர்ந்து நான், அப்போது சங்க முயற்சியால் ஜே.பி. பட்டம் பெற்ற திரு.உ.இராமசாமி நாடார் அவர்களின் பின்சென்று சங்க இல்லம் பற்றி அவரிடம் வற்புறுத்தி, இறப்பவர் என்றும் வாழ ஒரு திருப்பணி சமூகத்துக்குச் செய்ய வேண்டுமென்று கூறி, சிராங்கூன் ரோடிலுள்ள கட்டிடத்தைப் பெற்றேன்.
தமிழர் ஸ்தாபனம் எதற்கும் இல்லாத தனிக் கட்டிடம் த.சீ. சங்கத்திற்கு உண்டு. ஆதலால் அது செப்பனிடப்பட்டாக வேண்டும். அதற்குத் தமிழர் ஐக்கியப் பட வேண்டும் என்றும் அ.சி. சுப்பையா கூறினார்.

தமக்கு பேரன் பேத்திகள் 36 பேர் என்று திரு. அ.சி. சுப்பையா அறிவித்தார்.
இறுதியாகச் சங்கத் தலைவர், சங்க அங்கத்தினர்களின் அன்பை வெளிக் காட்டும் வாய்ப்பாக அளிக்கப்பட்ட தேநீர் விருந்திற்கு விஜயம் செய்த திரு. சுப்பையா அவர்கட்கும் திருமதி. அஞ்சலை அவர்கட்கும் முதலில் நன்றி தெரிவித்தார். மற்றும் தேநீர் விருந்தில் வந்து கலந்து கொண்ட பிரமுகர் களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதற்கு முன்பு சங்கம் திரு. அ.சி. சுப்பையாவின் 74 வது பிறந்த நாளைக் கொண்டாடுவது பற்றிய உரிமை என்ன என்பது பற்றிக் குறிப்பிட்டார். த.சீ.சங்கம் நிறுவப்பட்டு வளர, நற்றொண்டாற்ற சங்கமும் சுப்பையாவும் ஒன்றாகக் கொட்டியும் ஆம்பலும் என ஒட்டி உறவு கொண்டு நின்று உழைத்ததுவும், சங்கத்தின் இன்ப துன்பங்களில் கலந்து நின்றதுவும் ஆகும் என்றும் திரு. கோ.சாரங்கபாணி அவர்கள் குறிப்பிட்டார்கள். (தமிழ் முரசு 16.12.1954)

அ.சி. சுப்பய்யா அவர்களின் விண்ணப்பம்!

இம்மலாய் நாட்டில் வதியும் நம் தமிழ் பெரு மக்களுக்கோர் விண்ணப்பம்!
அன்புடையீர்!

இம் மலாய் நாட்டில் தலைநகரமாகிய இச் சிங்கையின்கண் நம் தமிழ் மக்களின் முன்னேற்றங் கருதி தமிழர் சீர்திருத்தச் சங்கம் என்ற ஓர் சங்கம் 1932 ஆம் நிறுவப்பட்டுள்ளதையும், அது காலகிரமத்தில் நன்னிலை எய்தி வருகின்ற தென்பதையும் உங்களுக்கு யயடுத்துச் சொல்ல வேண்டற்பாலதன்றென நினைக்கிறேன். ஏனெனில் இவ்வாண்டு மேற் திங்கள் மூன்றாம் நாள் இவ்வூர் ராயல் தியேட்டரில் கூட்டப்பட்ட வருடாந்திரக் கூட்டத்தில் அங்கத்தினர் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு அறிக்கையில் நிரவியுள்ள விசயங்களைக் கண்ணுற்ற நீங்கள் நமது தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு சங்கம் செய்துள்ள பணியை தெள்ளத் தெளிய அறிந்து கொண்டிருப்பீர்களென்று நம்புகிறேன்.இச் சங்கத்தை இன்னும் மேனிலைக்கு கொண்டுவந்து மக்கள் பால் செய்ய வேண்டிய தொண்டுகள் அநந்தம் இலை மறை காய்போல மறைந்து கிடப்பினும் அவற்றையயல்லாம் ஒன்றின் பின் ஒன்றாய் செய்து வரவேண்டியே மூவாண்டு திட்டம் என்ற ஓர் திட்டத்தையும் கோரியுள்ளது. அதுவும் சென்ற 4.10.36 -ல் கூடிய பொதுஜனக் கூட்டத்திலும் ஏக மனதாய் உறுதி செய்யப்பட்டதையும் நமது மகிழ்ச்சிக்குரிய செயலேயாகும். அத் திட்டத்தின் விபரங்கள் லெல்லாம் நம் தமிழ் முரசு பத்திரிகையின் வாயிலாய் வெளிவந்துள்ள படியால் ஈண்டு அதை பிரசுரிக்க வேண்டப்பாலதன்றெனக் கருதுகிறேன். அத் திட்டத்தின் படி நாம் செய்ய வேண்டிய முதல் வேலை, இவ்வாண்டின் இறுதிக்குள் சங்கத்தின் அங்கத்தினரை இரண்டாயிரமாக்க வேண்டுமென்பதேயாகும். அதற்காக வேண்டியே , 50 அங்கத்தினர்களைக் கொண்ட அங்கத்தினர் சேர்க்கை கமிட்டி ஒன்றும் நிர்மானிக்கப்பட்டு வேலை நடந்து வருவதும் பாராட்டத் தக்கதேயாகும்

இருப்பினும், இன்னும் 40 தினங்களுக்குள் நமது கோரிக்கை முற்றுப் பெற வேண்டியிருப்பதால், இவ்விண்ணப்பத்தைக் கண்ணுறும் ஒவ்வொரு தமிழ் மக்களும் ஜாதி, மத வேற்றுமையின்றி நந் தமிழ் மக்களின் முன்னேற்றங் கருதி இச் சங்கத்தில் அங்கத்தினராகும்படி உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். ஆனால் என் பணிவுக்கு நீங்கள் செவிமடுக்க முற்படாதிருக்க பல காரணங்கள் உங்களிடத்தில் திகழப் பெறினும் பெறலாம். நீங்கள் தற்கால உலக முற்போக்கின் காரண காரியத்தை அறிந்து கொண்டு அதன் படி செல்லக் கூடியவர்களாகவும் இருக்கலாம். அல்லது நல்ல அறிவியக்க வாதியாய் திகழலாம். பழயன கழித்து புதியன கைக் கொண்டு நடத்தலாம். அருத்தமற்ற மூடப் பழக்கவழக்கங்களை அறவே யயாழித்த சீர்திருத்தத் துறையில் முன்னேறிச் செல்லலாம். ஜாதி மத பேதமற்று, எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் மக்களாகக் கருதி வாழலாம்.எமது அன்னையார்களுக்கும், சகோதரிமார்களுக்கும் பெண்ணுரிமை நல்கிப் பேணலாம். அரசனையும் ஆண்டியையும் சமத்துவமாக எண்ணி நடக்கலாம். ஏழை தொழிலாளிமார்களுக்காக முதலாளிமார்களுடன் பரிந்து பேசலாம். கல்வியற்ற ஏழைகளுக்கு கல்வி தானஞ் செய்யலாம். இருக்க இடமின்றி, குந்தக் குச்சின்றி நிராதரவாயிருக்கும் மக்களுக்கு இடவசதிசெய்து கொடுக்கலாம். பசிப்பிணியால் வாடிக் கிடப்போருக்கு உணவளித்து பசரிக்கலாம். உடுத்த உடையற்றவர்களுக்கு உடையளித்துதவலாம். இன்னும் இவை போன்ற ஜீவகாருண்ய செயல்களெல்லாம் நமது நித்திய கருமமாகக் கொண்டு நடத்தலாம். ஆதலால் பிறிதோர் சங்கமோ, சபையோ கூட்டுறவு ஸ்தாபனமோ நமக்கு வேண்டற்பாலதன்றென்பதை நமது மனதில் தீர்மானித்து விடுவது இயற்கையின் பாற்பட்டதே யயனினும் உங்கள் இயற்கை அன்னையின் உறுதுணையை உங்கள் சகோதரர்கட்கும் அனுபவிக்க நீங்கள் உதவியளிக்க கடமைப்பட்டுள்ளீர்களென்பதை மறந்துவிடக் கூடாதென்பதே நான் உங்களைக் கேட்டுக் கொள்ளும் விண்ணப்பமாகும்.உங்கள் சகோதரர்கட்கு நீங்கள் மனமுவந்து உதவியளிக்காவிட்டால் அவர்களின் அறியாமை யயன்னும் மூடப் பழக்க வழக்கமென்னும் சாகரத்திலிருந்து கரையேறுவது மிகவும் கஷ்டமான காரியமாகுமென்பதை நீங்கள் கருதப்பாலதாகும். ஆனது பற்றியே அவர்களுக்காதரவு அளிக்கவாவது நீங்கள் ஒவ்வொருவரும் அங்கம் பெற வேண்டுமென்பதே எனது தாழ்மையான விண்ணப்பமாகும். அல்லாமலும் இச் சங்கத்தில் இந்து, முஸ்லீம், கிருஸ்துவ முதலிய சமயவாதிகளும் தமிழர்கள் யயன்ற ஹோதாவில் அங்கம் பெற்று நம்மிடையிலுள்ள வேற்றுமைகளை களைத்து ஒற்றுமையைக் கைக்கொண்டு பரஸ்பரவுணர்ச்சியுடன் நம் மக்களை முன்னேற்றத் துறையில் கொண்டு செலுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகுமென்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதற்கனு கூலமாகவே இதில் அங்கத்தினராய் சேரும் ஒவ்வொருவர்களுக்கும் வருட சந்தா ஒரு வெள்ளியாக ஏற்படுத்தப்பட்ட தென்பதையும் உங்களுக்கு ஞாபகமூட்ட கடமைப்பட்டிருக்கின்றேன். ஆனால் இன்னொரு விசயத்தையும் உங்களுக்கு தெளிவுபடுத்திவிடுவது பொருத்தமுடையதாகுமெனக் கருதுகின்றேன்.

அதாவது ; நமது சகோதரர்களில் சிலர் நம்மீது காரணமின்றி துவேஷத்தை உண்டுபண்ணிக் கொண்டிருக்கிறார்களென்பது வெளிப்படையான விசயமாகும். அதுவும் அவர்களின் அறியாமையின் பாற்பட்டதெனவே கருத வேண்டியிருக்கின்றது.முதலாவது அவர்கள் நம்மீது சாட்டும் குற்றமாவது கடவுளில்லை, மதமில்லை யயன்று சொல்லும் நாஸ்தீகக் கூட்டத்தார்கள் என்கின்றார்கள். அவர்கள் சொல்லுகிறபடி கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ நமக்கு கிஞ்சிற்றும் கவலையில்லையென்றும் ; நமது மக்களை மாக்களாக்காமல், பிற நாட்டாரைப் போன்று நாமும் முன்னேற்றப் பாதையில் தலை நிமிர்ந்து செல்ல வேண்டுமென்ற ஒரே காரணத்தினால்தான் இச்சங்கம் ஸ்தாபிக்கப்பட்ட தென்பதை அனுபவ வாயிலாக அவர்களுக்கு எடுத்துக் காட்டியும், அவர்கள் மனந்திரும்புவதுமில்லை . துவேசப் பிரசாரத்தை விட்டொழிப்பதுமில்லை.பொறாமைக்குணமே உருவாகக் கொண்டுள்ளவர்களுக்கு எவ்வளவுதான் நியாய வாயிலாக எடுத்துக் காட்டினாலும் அவர்களின் மூளையில் பதிவது மில்லை. அல்லது அவர்களின் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பது மில்லை. அவர்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டு திரிவது அவர்களது சுபாவ புத்தியாய் போய்விட்டது என்றுதான் நாம் கொள்ள வேண்டும். ஆகையால் அவற்றை யயல்லாம் பொருட்படுத்தாமல் நமது சீர்திருத்த இயக்கத்தில் பத்துக் கோடு கொண்டுள்ள ஒவ்வொரு அன்பர்களும் வெளியூர் களிலிருந்தாலும் அல்லது உள்ளூரிலிருந்தாலும் இச்சங்கத்தில் அங்கம் பெற்று உங்கள் சகோதர வாஞ்சையை காண்பிக்கவும் நம் நாட்டு மக்கள் முற்போக்கடைய வேண்டிய அவர்களுடன் ஒத்துழைக்க முன் வரும் படியாகவும் மீண்டும் ஒருமுறை பணிவுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்

சிங்கப்பூர்
16.11.36

காந்தரசம் அ.சி. சுப்பய்யா அவர்கள்

காந்தரசம் கம்பெனி உரிமையாளர்

ஸ்ரீமான் அ.சி. சுப்பய்யா அவர்கள்


தென்னிந்தியாவில் தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்த திருமக்கோட்டைக் கிராமத்தில் ஸ்ரீமான் அ. சிதம்பர தேவரும் பத்தினியார் ஸ்ரீமதி மங்களதம் மாளும், நாகை மீனாட்சியயன்னும் பாய்க்கப்பலில் பிரயாணமாகி 1875-ம் ஆண்டு சிங்கப்பூர் வந்தனர். இவர்கள் தபோ பலத்தால் ஸ்ரீமான் சுப்பய்யா அவர்கள் 1881 ஆம் வரு­ம் டிசம்பர் மாதம் 12 - ம் திகதி ஜெனனமாயினர். தக்க வயதில் தானே தந்தையார் இவருக்கு கல்வி கற்பிக்க வேண்டிய எத்தனங்களைச் செய்தனர். இளமையிற்தானே விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற ஆன்றோர் வாக்குக்கிணங்க கடவுள் பக்தி, குரு பக்தி, பெற்றோர் பக்தியுடையராய்க் காணப்பட்டாரன்றியும், மன்னுயிர் யாவையும், தன்னுயிர் போல் பாதுகாக்கும் சிறந்த குணமுடையவராகவும் காணப்பட்டார். ஆங்கிலக் கல்வியின் உயர்வைத் தந்தையாராயினும் தாயாராயினும் பொருட்படுத்தா தினால் நான்காவது வகுப்பு வரையிலும் ஆங்கிலங் கற்று வருகையில் தந்தை தாயார், ஜெனனதேசம் போக வேண்டியிருந்தமையால், சுப்பய்யா அவர் களும் 1894-ம் வரு­ம் அவர்களுடன் சென்றனர். அங்கும் காலத்தை வீணாய்க் கழிக்கவில்லை. சிற்பம், சித்திரம், வைத்தியம், சோதிடம் முதலிய வி­யங்களில் கவனஞ் செலுத்தவராயினர். இவரின் நுண்ணிய அறிவி னாலும், கையாண்ட வேறு வேலைகளினாலும் இவர் அறிவு வளர்பிறைச் சந்திரன் போல் வளர்ந்தது.

மகாத்மா சதாநந்த சாமியவர்களின் அருள் கிடைக்கப் பெற்றமையால், ஆத்மார்த்தமான உபதேசங்களையும், சில அபூர்வ மான வைத்திய முறைகளையும் கற்று, அவரின் ஆசீர்வாதத்தால் ஸ்ரீமதி அஞ்சலையம்மாளை மணக்கிழத்தியாகக் கொண்டு சதிபதிகளிருவம் 1901-ம் வரு­ம் சிங்கப்பூர் வந்தனர். வந்த சில தினங்களின் பின் அரசாங்கப் பதார்த்த பரிசீலனப் பகுதியிலும், சிப்பாய் கோல்பந்து விளையாட்டுப் பகுதியிலும் திருப்பதியாய் வேலை செய்த பின் சொந்த வேலைகளில் ஈடுபட்டு சித்திரம் சித்தரிப்பதிலும், சில்லறை கட்டிட வேலைகள் ஒப்பந்தத்திலும் இன்னோரன்ன பல வேலைகளிலும் சீவியம் நடத்தி வந்தனர். இவ்வாறான வி­யங்களிலும் பரோபகாரமான குணத்தினாலும், பிறர்மேல் வைத்த அன்பினாலும், இவர் பெயர் நம் மக்களுள் மாத்திரமன்றிப் பிறர் மக்களுள்ளும் பிரக்கியாதி பெற்றது. தேடிய திரவியங்களும் வளரத்துவங்கின. தனலட்சுமியும் கண்ணோக்கினள். இவ்வாறான நிலைமை எய்திய பின்னர் சிராங்கூன் ரோட்,251- நி. இல்லத்தில் சித்த வைத்திய பாற்மேசி எனும் காந்தரசக் கம்பெனியை ஸ்தாபகஞ் செய்து வைத்தியம் நடத்தினர். இவரின் கையால் மண்ணைக் கொடுத்தாலும் பொன் போன்ற மருந்தானது. ஆகையினால் இவருடைய வைத்திய நிலைமை மலாய் நாடுகளில் எவ்வளவு தூரம் எட்டுமோ, எத்தனை சந்து பொந்துகள் நுழையுமோ, அத்தனை இடங்களுக்கு எட்டியும், நுழைந்தும் வேலை செய்தமையால் அயல் நாடுகளெங்கணும் பரவத் துவங்கியது.

இவருடைய அதிர்ஷ்டத்தோடு குணமும் மனமும் கூடிக் கொண்டன. கைபாகம் செய்பாகமும் முறை தவறாமல் நிறைவேறியது. தமது வைத்திய சாலையை மென்மேலும் விருத்தியாக்குவதற்கு நினைத்துத் தனிக் கட்டிடங்களாகச் சொந்தத்தில் மேல் கண்ட சிராங்கூன் ரோட், 233, 235-நிம்பர்களில் மிகவும் விமர்சையாய் நடத்தி வருகின்றார். தனத்துக்கேற்ற குணம்போல் இம்மலாய் நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி பொதுஜன நன்மையின் பொருட்டு எத்தனையோ வி­யங்கள் புரிந்திருக்கின்றன. அவைகளியவையுங் கூற நமது சரித்திரமிடங்கொடாததினால், சிலதை மாத்திரம் இங்கு குறிப்பிடு கின்றோம். சிங்கை விவேகானந்த சங்கம், ஆதித்திராவிட சங்கம், முதலிய சங்கங்களின ஸ்தாபகராயும், சில சங்கங்களின் அங்கத்தவராயும், எவரும் விரும்பத்தக்கவாறு தொண்டு புரிந்திருக்கின்றார்.

1932-ல் சில நன்மக்கள் முயற்சியால் ஸ்தாபகஞ் செய்யப்பட்ட, சீர்திருத்தச் சங்கத்திற்கு சங்கங்களின் அபிமானமும், பேரன்பும் காரணமாக 1000 அங்கத்தவர்களுக்கு மேற்கொண்ட மேற்படி சங்கத்திற்குச் சபாநாயகராய் தெரிவு செய்யப்பட்டு தமது தொண்டை அங்கத்தினர் முழுத்திருப்திக்கும் ஏற்ற வாறு தொண்டு நடத்துகின்றார். இவருடைய தவவே உருப் போல் விளங்கும் இரண்டு ஆண் மக்களும், ஒரே பெண் மக்களும் போதிய பேரன் பேத்தி மார்களும் உண்டு. இவர் ஓர் மிக பேரன்பிமானி யன்பது பலர் அபிப் பிராயம். எல்லாம் வல்ல இறைவன் இன்னும் பொதுத்தொண்டில் ஈடுபட அருள் புரிவா வாராக. (Glorious Malaya in Tamil by Mr. S. Muthusamy Pillay,1937)