உ. ராமசாமி நாடாருக்கு ஜே.பி. பட்டம்
பத்திரிகைகள் பாராட்டுதல் (குடியரசு 18.08.1940)
எந்தக் காரியத்தையும் தீர்க்ககாலோசனையுடன் செய்து முடிப்பவர்கள் வெகு சிலரே. அச்சிலருள் சிங்கப்பூர் பிரபல வர்த்தகரும் பெரிய தனவந்தரும் பரோபகாரருமான கனம் உ. ராமசாமி நாடார் அவர்களும் ஒருவர். அவசரப்பட்டு ஒரு காரியத்தில் இறங்கி பிறகு அவஸ்தைப்படும் வழக்கம் நம் நாடார் அவர்களிடம் கிடையாது. அதைப்போலவே ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ஒரு காரியத்ல் இறங்கிவிட்டால் அதில் வெற்றி பெறாமல் பின்னடைவது மில்லை. இந்த குணமே கனம் நாடார் அவர்களின் இன்றைய நிலைçக்கு அடிப்படை என்று கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமின்றி கூறிவிடாலாம்.
சரித்திர பிரசித்திப் பெற்ற பாண்டிய நாட்டிலே ராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர் தாலுகாவைச் சேர்ந்த மணச்சை என்ற இயற்கை அழகில் சிறந்து விளங்கும் சிற்றூரிலே சூத்திர குலமணி, கருணையும் புகழும் நிறையயப் பெற்ற பெரியார் உடையப்ப நாடார் அவர்களுக்குகும் உத்தமி சுபலட்சணங்களும் கூடிய திருவாட்டி சின்ன கருப்பாயி அம்மாள் அவர்களுக்கும் சர்வதாரி ஆண்டு ஆவணித் திங்கள் 19ந் தேதி ஞாயிற்றுக் கிழமை தவப் புதல்வராய்ப் பிறந்த கனம் ராமசாமி நாடார் அவர்கள் சுமார் 32 வருடங்களுக்கு முன் மலாய் நாட்டுக்கு வந்தவர்.
இந்த நாட்டுக்கு வந்த இரண்டொரு வருடங்களுக்குள்ளாகவே சிங்கையிலும் பினாங்கிலும் , ஆப்காரி காண்டிராக்டராயருநதும் (1912 முதல் 1929 வரை) அரசாங்கத்திடம் மேற்படி தொழிலில் நல்ல பெயருடன் செல்வமும் சம்பாதித்தார். அத்துடன் நில்லாமல் மளிகை வியாபாரத்தை விரிவாக ஆரம்பித்து தமிழர்களிலும் பெரிய வியாபாரிகள் உண்டு என்ற பெயரை நிலைநாட்டியவர் கனம் நாடார் அவர்களேயாவர்.
1919 ஆம் ஆண்டிலேயே இந் நாட்டில் குடும்பத்துடன் குடியேறி இன்று பெரிய நிலச்சுவான்தாரராகவும் முனிசிபாலிட்டிக்கு தமிழர்களில் அதிக வரிப்பணம் கொடுப்போர்களில் ஒருவராயும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். பொருள் செல்வத்தில் சிறந்து விளங்கும் கனம் நாடார் அவர்கள் தோழர்கள் இரத்தினம் அம்மாள், ராக்காயி அம்மாள் என்னம் இரண: உத்தம மனைவிகளைப் பெற்றிருப்பதுடன் மக்கள பேற்றிலும் 4 புதல்வர்கள் 7 புதல்விகளுடன் சிறந்து விளங்குகிறார்கள். அவர்களின் புதல்வர்களில் ஒருவர் அண்ணாமலை சர்வகலாசாலையில் உயர்தரக் கல்வி பயின்று வருகிறார். தமது மூத்த புதல்வியாம் தோழர் கோவிந்தம்மாளை மணஞ்செய்து கொடுத்ததன் மூலம் தோழர் பி. ஆதித்தன் அவர்களை மாப்பிள்ளையாக அமைந்திருக்கும் தோழர் நாடார் அவர்கள் பல பெளத்திரர்களையும் பெற்று விளங்ககிறார்.
ராஜ விஸ்வாசத்திலும் யாருக்கும் பின்னடைந்தவர்கள் அன்று என்பதை மலாயா தேச பக்த நிதிக்கு இரண்டு தடவைகளில் 6000 வெள்ளி அறித்ததன் மூலமும் சென்ற மகா யுத்தத்தின் போது அரசாங்கத்துக்கு பொருளுதவி செய்ததினமூலமும் நிரூபித்திருக்கிறார்கள். மலாயா தேச பக்த நிதிக்கு தென் இந்தியர்கள் பிரிவுக்கு சேர்மனாக தலைமை வகித்து பெரும் தொகையும் வசூலித்துக் கொடுத்தார்கள். மேலும், இந்தியாவிலிருந்து இவ்விடம் வந்திருக்கும் இந்தியத் துருப்புகள் களிப்பூட்டு நிதிக்கு முதலில் நன்கொடையாக வெள்ளி 500 கொடுத்ததுடன் 1940ஜனவரி மாதத்திலிருநது மாதா மாதம் வெள்ளி 50 சந்தாவாகக் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள். மேற்படி துருப்புகள் நிதிக்கு மற்றும் வியாபாரிகளிடமும் மற்றவர்களிடமும் தமது செல்வாக்கினால் வசூல் செய்து பெருந்தொகை கொடுத்திருக்கிறார்கள. பொது ஸ்தாபனங்களும் பாடசாலைகளும் என்பதில் கனம் நாடார் அவர்களுக்கு அதிக ஆர்வம் உண்டு. அதற்காக பல் பொதுஸ்தாபனங்களுக்கு பொருளுதவி வந்திருப்பதுடன் தமிழர் சீர்திருத்த சங்கத்தின் போகர்களாகவுமிருந்து வருகிறார்கள். இந்தியாவில் குன்னக்குடியில் நாடார் மடத்தை அதிய பிரயாசையின் பேரில் கட்டி முடித்திருப்பது கனம் ராமசாமி நாடார் அவர்களுக்கு சமூக முன்னேற்றத்திலும் பொது காரியங்களிலும் இருக்கும் ஆர்வத்தைக் காட்டுவதாகும். இவ்வளவு நன் நோக்கத்துடனும் தாராள சிந்தையுடனும் பல ஸ்தாபனங்களுக்கு பொருளுதவி செய்திருந்தும் எதிர்பார்க்கப்பட்ட பலனோ அபிவிருத்;திகளோ ஏற்படவில்லை யயன்றால் அது நாடார் அவர்களின் தவறாக மாட்டாது.
செல்வத்தில் மூழ்கிக் கிடக்கும் சிலரைப்போல் ஏழை மக்களை கண்டால் சீறி விழாமல் பசித்து வரும் பாட்டாளி மக்களுக்கு உணவளித்து சில சமயங்களல் உடுக்கத் துணியில்லாதவர்களுக்கு உடையளித்து வருவது கனம் நாடார் அவர்களின் அரிய செய்கையில் ஒன்று. இச் சிங்கையில் எத்தனையோ தமிழ்ப் பிரமுகர்கள் வதிந்தார்கள். பலமலைகளுக்கும் நிலங்களுக்கும் சொந்தக் காரர்களாயிருந்த அவர்கள் பெயரும் சொத்து சுதந்தரங்களும் மரணத்துக்குப் பின் மறைந்து விட்டது என்பதை அறிந்திருக்கும் கனம் இராமசாமி நாடார் அவர்கள் தமது பெயரை என்றும் நிலைத்திருக்கும் படி யாகவும் தமிழ்நாட்டினருக்கு பயன்படும்படியாகவும் ஏதேனும் ஒரு சிறந்த காரியத்தை செய்து விட வேண்டுமென முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆழ்ந்த யோசனைக்குப் பின் செய்திருக்கும் இந்த முடிவின் படி அக்காரியத்தை விரைவில் செய்து தமிழர்களின் நன்றிக்கு என்றென்றும் உரித்தானவர்களாக விளங்குவார்கள் என்று எதிர்பார்ப்மோமாக.(தமிழ்முரசு)
உலகத்தில் எடுத்த காரியத்தை ஆரஅமர தீர்க்கமாக யோசித்து கிரியாம்சையிலிறங்கிய பிறகு என்ன நேரினும் நிலை கலங்காது வைரம் போன்ற வைரம் போன்ற மன வுறுதியோடு செய்து முடிப்பவர் மிகச் சிலரே என்பது வெள்ளிடைமலை. அச் சிலருள் சிங்கப்பூர் பாரி வியாபாரியும் பிரபல நிலச் சுவான்தாரும், ரப்பர் எஸ்டேட் சொந்தக்காரரும், பெரிய தனவந்தரும், பரோபகாரியும், ஏழை பங்காளருமான தோழர் உ. இராமசாமி நாடார் அவர்களும் ஒருவர். இவர் இந்தியன் அசோசின் பேட்ரனும், தமிழர் சீர்திருத்த சங்கம் தன போகரும், விவேகானந்த சன்மார்க்க சங்கம், சிங்கை தமிழர் இளைஞர் கழகம் முதலிய பொது ஸ்தாபனங்களின் தன போகரும், தென்னிந்திய வர்த்தக சங்கத்தின் வைஸ் சேர்மனும் பினாங்கு இந்து சபை போகருமாவார்.
சரித்திர ஆராய்ச்சிக்கு எட்டாத காலம் முதல் அறத்துக்கு உறைவிடமான நமது பரத கண்டத்துள் அருட்கும், தண்டதமிழ் மொழிக்கும் நிலைக்களாயிலங்கும் தென்பாண்டி நாட்டிலே இராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர் தாலுகாவை சார்ந்ததும் இயற்கை தேவியினது பூரண ஜாஜ்வல்லியத்துடன் நர்த்தனம் செய்யப் பெற்றதுமான மணச்சை எனும் சிற்றூரில் சத்திரிய குல மணிகளுள் நாயகமணியாக ஒழுக்கம், பொறை, புகழ் நிறைந்த பெரியார் தோழர் உடையப்ப நாடார் அவர்களுக்கும் பூர்த்தியான சுபலட்சணங்கள் நிறைந்த திருவாட்டி சின்னகருப்பாயி அம்மாள் அவர்களுக்கும் சர்வதாரி வரும் ஆவணி மாதம் 19 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையாகிய நன்னாளில் தவப்புதல்வராக பிறந்த தோழர் ராமசாமி நாடார் அவர்கள் 32 வருடங்களுக்கு முன் மலாய் நாட்டுக்கு வந்தவர். அந்நாட்டுக்கு வந்த இரண்டொரு ஆண்டுகளுக்குள் சிங்கப்பூரிலும் பினாங்கிலும் ஆப்காரி கான்ட்ராக்டராயிருந்து, 1912 இல் இருந்து 1919 வரை மேற்படி தொழிலில் அரசாங்கத்தினரிடம் நல்ல பெயருடன் பெரும் பொருள் சம்பாதித்திருக்கிறார்.
இந்நாட்டுக்கு வந்து கொஞ்சம் பொருள் தேடியதும் இந்தியாவுக்கு திரும்பிவிடும் பெரும்பாலான ஜனங்களைப் போலன்றி 1919 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் தனது தாயாதிகளிடம் பாகப் பிரிவினை செய்து கொண்டு இந்நாட்டில் குடும்பத்துடன் குடியேறி, சிங்கையிலும், மூவாரிலும் ஜவுளி‡மளிகை வியாபாரத்தை விரிவாக ஆரம்பித்து நடத்தி தமிழர்களிலும் பெரிய வியாபாரிகள் உண்டு என்ற பெருமையை நிலைநாட்டியிருக்கிறார். இன்று இச்சிங்கையில், முனிசிபாலிட்டிக்கு இந்தியர்களில் அதிக வரிப்பணம் செலுத்துவோர்களில் ஒருவராயும் தமிழர்களில் தலைசிறந்தவராயும் விளங்குகிறார்.
செல்வச் சீமான் நாடாரவர்கள் 4 புதல்வர்களையும் 7 புதல்விகளையும் பெற்றிருக்கிறார்.
அவர்களின் புதல்வர்களில் ஒருவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உயர்தரக் கல்வி பயின்று வருகிறார். தமது சிரேஷ்ட குமாரி பங்கயச் செல்வி ¼Vவிந்தம்மாளை மணம் செய்து கொடுத்ததின் மூலம் சிறந்த லாயர்களில் ஒருவரான தேழர் எஸ்.பி. ஆதித்தன், எம்.ஏ பாரிஸ்டர் அவர்களை மாப்பிள்ளையாக அடைந்திருப்பதுடன் பல பெளத்திரர்களையும் பெற்று விளங்குகிறார்.
ராஜவிசுவாசத்திலும் யாருக்கும் பின்னடைந்தவர் அன்று என்பதை மலாயா தேச பக்த நிதிக்கு வெள்ளி 6000 - கொடுத்ததின் மூலமும், சென்ற மகா யுத்தத்தின் போது பெரும் பொருள் உதவி செய்ததின் மூலமும் நிரூபித்திருக்கிறார். மலாயா தேசபக்த நிதிக்கு தென்இந்தியர் பிரிவுக்கு சேர்மனாக தலைமை வகித்து பெருந்தொகை வசூலித்துக் கொடுத்திருக்கிறார்.
மேலும் இந்தியாவிலிருந்து இவண் வந்திருக்கும் இந்திய துருப்புகளின் களியாட்டு நிதிக்கு முதலில் நன்கொடையாக வெள்ளி 500 கொடுத்ததுடன் 1‡1‡40 முதல் மாதாமாதம் 50 வெள்ளி சந்தாவாகவும் கொடுத்துக் கொண்டு வருகிறார். மேற்படி துருப்புகள் நிதிக்கு மற்றும் வியாபாரிகளிடமும் தனது செல்வாக்கினால் பணம் வசூலித்துக் கொடுத்திருக்கிறார். தற்சமயம் யுத்த நிதிக்கு வெள்ளி 100 கொடுத்தும், யுத்த நிதிக்கு தென்இந்தியர் பிரிவு கமிட்டிக்கு சேர்மானகவும் இருந்து வசூலித்து வருகிறார்.
பொதுஸ்தாபனங்களும் பாடசாலைகளும் முன்னுக்கு வர வேண்டும் என்பதில் தோழர் நாடார் அவர்களுக்கு அளவு கடந்த ஆர்வம் உண்டு. அதற்காகப் பல பொது ஸ்தாபனங்களுக்கும் பலகாலும் பொருளுதவி செய்திருக்கிறார். இதனின்றி பல சங்கங்களுக்கும் பொருளுதவி செய்திருப்பதுடன் இம்மலாயவிற்கே இந்து சமூகத்தின் முதல் ஸ்தாபனமாக உள்ள பினாங்கு இந்து சபையின் ஜீவிய போகராகவும் இருந்து வருகிறார்.
குன்னக்குடியில் நாடார் மடத்தை அதிக பிரயாசையின் பேரில் கட்டி முடித்திருக்கும் சிறப்பு குன்னக்குடி திருமுருகன் ஆலயத்திற்கு ஏகும் அன்பர்களுக்கு தெற்றென விளங்கா நிற்கும். இத்தியாதி காரியங்கள் தோழர் நாடார் அவர்களுக்கு சமூக முன்னேற்றம் பெண்கல்வி, தேசாபிமானம், முதலியவைகளில் உள்ள பேரார்வத்தை காட்டுகின்றன.
ஏழை மக்களை கண்டால் சீறிவிழும் சிலரைப் போல் அல்லாமல் பசித்து வரும் பாட்டாளி மக்களுக்கு உணவளித்து, சிலவேளை உடுக்க உடையற்றவர்களுக்கு உடையளித்தும் ஆதரித்து வருவது தோழர் நாடார் அவர்களின் அரிய செய்கைகளில் ஒன்று. இந்த அருங்குணமே தோழர் நாடார் அவர்களின் இன்றய உயரிய நிலைமைக்கு அடிப்படை என்பதை கொஞ்சமும் சந்தேகமின்றி கூறிவிடலாம்.
சிங்கை இந்தியன் அசோசியேன் கட்டிட நிதிக்கு வெள்ளி 5000 கொடுத்திருக்கிறார். இராமகிருஷ்ண மடாலயம், விவேகானந்த சன்மார்க்க சங்கம் இவைகளுக்கு பொருளுதவி செய்திருப்பதுடன் மாத சந்தாவாக நன்கொடையும் அளித்து வருகிறார். தென் இந்திய வர்த்தக சங்க நிதிக்காக வெள்ளி 600 கொடுத்திருக்கிறார். சங்க முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறதுடன் மேற்படி சங்கத்தின் உப தலைவராகவும் இருந்து வருகிறார்.
ஏழை மக்களுக்கு வைத்திய உதவி அளிப்பதற்காக பினாங்கு இந்து சபையின் மாரலாக வெள்ளி 1000 கொடுத்தும், சிங்கப்பூர் பெண் பாடசாலை ஒன்றுக்கு பொருள் உதவி செய்தும், சிங்கை முனிசிபாலிடிக்கு பணம் வாங்காமலே தனக்கு சொந்தமாயிருந்த நிலத்தை ரோடு போடுவதற்காக இனமாக கிராண்டு போட்டுக் கொடுத்தும் கோலாலம்பூர் பத்துமலை தெண்டாயுதபாணி ஆலயத்திற்கு படிகள் கட்டுவதற்கு நன் கொடை அளித்தும், ரக்சன்ய சேனை நிதிக்கும், செயின்ட் இல்தா பள்ளிக்கூட கட்டட நிதியளித்தும், காரைக்கால் சேகரம் திருமலையராயன் பட்டணம் அருள்பாரத சங்க கட்டட நிதிக்கு ரூ. 500 கொடுத்தும், புதுக்கோட்டை ஸ்டேட்டைச் சார்ந்த காட்டுப்பாடியில் பள்ளிக்கூடம் கட்டட நிதிக்கு 500 இம் கொடுத்தும் இன்னும் பல சிறிய தருமங்களும் செய்திருக்கிறார்கள்.
சிங்கப்பூரில் அந்நாளில் எத்தனையோ தமிழ் பிரமுகர்கள் வசித்து வந்தார்கள். பல மலைகளுக்கும் நிலங்களுக்கும் சொந்தக்காரர்களாயிருந்த அவர்கள் அவர்களது மரணத்திற்குப் பின் அவைகள் மறைந்து விட்டதை செவ்வனே அறிந்திருக்கும் தோழர் நாடார் அவர்கள் தமது பெயரை என்றும் நிலைத்திருக்கும்படியாகவும் தமிழ் நாட்டினருக்கு பயன் தரக்கூடியதுமான ஒரு காரியத்தை உடனே செய்து விட வேண்டுமென முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. தீர்க்காலோசனையுடன் செய்திருக்கும் இச்சிறந்த முடிவின் படி அக்காரியத்தை விரைவில் செய்து தமிழர்களின் நன்றிக்கு என்றென்றும் உரித்தானவர்களாக விளங்குவார்களென்று எதிர்ப்பார்ப்போமாக.(விடுதலை)
No comments:
Post a Comment