இம்மலாய் நாட்டில் வதியும் நம் தமிழ் பெரு மக்களுக்கோர் விண்ணப்பம்!
அன்புடையீர்!
இம் மலாய் நாட்டில் தலைநகரமாகிய இச் சிங்கையின்கண் நம் தமிழ் மக்களின் முன்னேற்றங் கருதி தமிழர் சீர்திருத்தச் சங்கம் என்ற ஓர் சங்கம் 1932 ஆம் நிறுவப்பட்டுள்ளதையும், அது காலகிரமத்தில் நன்னிலை எய்தி வருகின்ற தென்பதையும் உங்களுக்கு யயடுத்துச் சொல்ல வேண்டற்பாலதன்றென நினைக்கிறேன். ஏனெனில் இவ்வாண்டு மேற் திங்கள் மூன்றாம் நாள் இவ்வூர் ராயல் தியேட்டரில் கூட்டப்பட்ட வருடாந்திரக் கூட்டத்தில் அங்கத்தினர் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு அறிக்கையில் நிரவியுள்ள விசயங்களைக் கண்ணுற்ற நீங்கள் நமது தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு சங்கம் செய்துள்ள பணியை தெள்ளத் தெளிய அறிந்து கொண்டிருப்பீர்களென்று நம்புகிறேன்.இச் சங்கத்தை இன்னும் மேனிலைக்கு கொண்டுவந்து மக்கள் பால் செய்ய வேண்டிய தொண்டுகள் அநந்தம் இலை மறை காய்போல மறைந்து கிடப்பினும் அவற்றையயல்லாம் ஒன்றின் பின் ஒன்றாய் செய்து வரவேண்டியே மூவாண்டு திட்டம் என்ற ஓர் திட்டத்தையும் கோரியுள்ளது. அதுவும் சென்ற 4.10.36 -ல் கூடிய பொதுஜனக் கூட்டத்திலும் ஏக மனதாய் உறுதி செய்யப்பட்டதையும் நமது மகிழ்ச்சிக்குரிய செயலேயாகும். அத் திட்டத்தின் விபரங்கள் லெல்லாம் நம் தமிழ் முரசு பத்திரிகையின் வாயிலாய் வெளிவந்துள்ள படியால் ஈண்டு அதை பிரசுரிக்க வேண்டப்பாலதன்றெனக் கருதுகிறேன். அத் திட்டத்தின் படி நாம் செய்ய வேண்டிய முதல் வேலை, இவ்வாண்டின் இறுதிக்குள் சங்கத்தின் அங்கத்தினரை இரண்டாயிரமாக்க வேண்டுமென்பதேயாகும். அதற்காக வேண்டியே , 50 அங்கத்தினர்களைக் கொண்ட அங்கத்தினர் சேர்க்கை கமிட்டி ஒன்றும் நிர்மானிக்கப்பட்டு வேலை நடந்து வருவதும் பாராட்டத் தக்கதேயாகும்
இருப்பினும், இன்னும் 40 தினங்களுக்குள் நமது கோரிக்கை முற்றுப் பெற வேண்டியிருப்பதால், இவ்விண்ணப்பத்தைக் கண்ணுறும் ஒவ்வொரு தமிழ் மக்களும் ஜாதி, மத வேற்றுமையின்றி நந் தமிழ் மக்களின் முன்னேற்றங் கருதி இச் சங்கத்தில் அங்கத்தினராகும்படி உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். ஆனால் என் பணிவுக்கு நீங்கள் செவிமடுக்க முற்படாதிருக்க பல காரணங்கள் உங்களிடத்தில் திகழப் பெறினும் பெறலாம். நீங்கள் தற்கால உலக முற்போக்கின் காரண காரியத்தை அறிந்து கொண்டு அதன் படி செல்லக் கூடியவர்களாகவும் இருக்கலாம். அல்லது நல்ல அறிவியக்க வாதியாய் திகழலாம். பழயன கழித்து புதியன கைக் கொண்டு நடத்தலாம். அருத்தமற்ற மூடப் பழக்கவழக்கங்களை அறவே யயாழித்த சீர்திருத்தத் துறையில் முன்னேறிச் செல்லலாம். ஜாதி மத பேதமற்று, எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் மக்களாகக் கருதி வாழலாம்.எமது அன்னையார்களுக்கும், சகோதரிமார்களுக்கும் பெண்ணுரிமை நல்கிப் பேணலாம். அரசனையும் ஆண்டியையும் சமத்துவமாக எண்ணி நடக்கலாம். ஏழை தொழிலாளிமார்களுக்காக முதலாளிமார்களுடன் பரிந்து பேசலாம். கல்வியற்ற ஏழைகளுக்கு கல்வி தானஞ் செய்யலாம். இருக்க இடமின்றி, குந்தக் குச்சின்றி நிராதரவாயிருக்கும் மக்களுக்கு இடவசதிசெய்து கொடுக்கலாம். பசிப்பிணியால் வாடிக் கிடப்போருக்கு உணவளித்து பசரிக்கலாம். உடுத்த உடையற்றவர்களுக்கு உடையளித்துதவலாம். இன்னும் இவை போன்ற ஜீவகாருண்ய செயல்களெல்லாம் நமது நித்திய கருமமாகக் கொண்டு நடத்தலாம். ஆதலால் பிறிதோர் சங்கமோ, சபையோ கூட்டுறவு ஸ்தாபனமோ நமக்கு வேண்டற்பாலதன்றென்பதை நமது மனதில் தீர்மானித்து விடுவது இயற்கையின் பாற்பட்டதே யயனினும் உங்கள் இயற்கை அன்னையின் உறுதுணையை உங்கள் சகோதரர்கட்கும் அனுபவிக்க நீங்கள் உதவியளிக்க கடமைப்பட்டுள்ளீர்களென்பதை மறந்துவிடக் கூடாதென்பதே நான் உங்களைக் கேட்டுக் கொள்ளும் விண்ணப்பமாகும்.உங்கள் சகோதரர்கட்கு நீங்கள் மனமுவந்து உதவியளிக்காவிட்டால் அவர்களின் அறியாமை யயன்னும் மூடப் பழக்க வழக்கமென்னும் சாகரத்திலிருந்து கரையேறுவது மிகவும் கஷ்டமான காரியமாகுமென்பதை நீங்கள் கருதப்பாலதாகும். ஆனது பற்றியே அவர்களுக்காதரவு அளிக்கவாவது நீங்கள் ஒவ்வொருவரும் அங்கம் பெற வேண்டுமென்பதே எனது தாழ்மையான விண்ணப்பமாகும். அல்லாமலும் இச் சங்கத்தில் இந்து, முஸ்லீம், கிருஸ்துவ முதலிய சமயவாதிகளும் தமிழர்கள் யயன்ற ஹோதாவில் அங்கம் பெற்று நம்மிடையிலுள்ள வேற்றுமைகளை களைத்து ஒற்றுமையைக் கைக்கொண்டு பரஸ்பரவுணர்ச்சியுடன் நம் மக்களை முன்னேற்றத் துறையில் கொண்டு செலுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகுமென்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதற்கனு கூலமாகவே இதில் அங்கத்தினராய் சேரும் ஒவ்வொருவர்களுக்கும் வருட சந்தா ஒரு வெள்ளியாக ஏற்படுத்தப்பட்ட தென்பதையும் உங்களுக்கு ஞாபகமூட்ட கடமைப்பட்டிருக்கின்றேன். ஆனால் இன்னொரு விசயத்தையும் உங்களுக்கு தெளிவுபடுத்திவிடுவது பொருத்தமுடையதாகுமெனக் கருதுகின்றேன்.
அதாவது ; நமது சகோதரர்களில் சிலர் நம்மீது காரணமின்றி துவேஷத்தை உண்டுபண்ணிக் கொண்டிருக்கிறார்களென்பது வெளிப்படையான விசயமாகும். அதுவும் அவர்களின் அறியாமையின் பாற்பட்டதெனவே கருத வேண்டியிருக்கின்றது.முதலாவது அவர்கள் நம்மீது சாட்டும் குற்றமாவது கடவுளில்லை, மதமில்லை யயன்று சொல்லும் நாஸ்தீகக் கூட்டத்தார்கள் என்கின்றார்கள். அவர்கள் சொல்லுகிறபடி கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ நமக்கு கிஞ்சிற்றும் கவலையில்லையென்றும் ; நமது மக்களை மாக்களாக்காமல், பிற நாட்டாரைப் போன்று நாமும் முன்னேற்றப் பாதையில் தலை நிமிர்ந்து செல்ல வேண்டுமென்ற ஒரே காரணத்தினால்தான் இச்சங்கம் ஸ்தாபிக்கப்பட்ட தென்பதை அனுபவ வாயிலாக அவர்களுக்கு எடுத்துக் காட்டியும், அவர்கள் மனந்திரும்புவதுமில்லை . துவேசப் பிரசாரத்தை விட்டொழிப்பதுமில்லை.பொறாமைக்குணமே உருவாகக் கொண்டுள்ளவர்களுக்கு எவ்வளவுதான் நியாய வாயிலாக எடுத்துக் காட்டினாலும் அவர்களின் மூளையில் பதிவது மில்லை. அல்லது அவர்களின் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பது மில்லை. அவர்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டு திரிவது அவர்களது சுபாவ புத்தியாய் போய்விட்டது என்றுதான் நாம் கொள்ள வேண்டும். ஆகையால் அவற்றை யயல்லாம் பொருட்படுத்தாமல் நமது சீர்திருத்த இயக்கத்தில் பத்துக் கோடு கொண்டுள்ள ஒவ்வொரு அன்பர்களும் வெளியூர் களிலிருந்தாலும் அல்லது உள்ளூரிலிருந்தாலும் இச்சங்கத்தில் அங்கம் பெற்று உங்கள் சகோதர வாஞ்சையை காண்பிக்கவும் நம் நாட்டு மக்கள் முற்போக்கடைய வேண்டிய அவர்களுடன் ஒத்துழைக்க முன் வரும் படியாகவும் மீண்டும் ஒருமுறை பணிவுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்
சிங்கப்பூர்
16.11.36
No comments:
Post a Comment