காந்தரசம் கம்பெனி உரிமையாளர்
ஸ்ரீமான் அ.சி. சுப்பய்யா அவர்கள்
தென்னிந்தியாவில் தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்த திருமக்கோட்டைக் கிராமத்தில் ஸ்ரீமான் அ. சிதம்பர தேவரும் பத்தினியார் ஸ்ரீமதி மங்களதம் மாளும், நாகை மீனாட்சியயன்னும் பாய்க்கப்பலில் பிரயாணமாகி 1875-ம் ஆண்டு சிங்கப்பூர் வந்தனர். இவர்கள் தபோ பலத்தால் ஸ்ரீமான் சுப்பய்யா அவர்கள் 1881 ஆம் வரும் டிசம்பர் மாதம் 12 - ம் திகதி ஜெனனமாயினர். தக்க வயதில் தானே தந்தையார் இவருக்கு கல்வி கற்பிக்க வேண்டிய எத்தனங்களைச் செய்தனர். இளமையிற்தானே விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற ஆன்றோர் வாக்குக்கிணங்க கடவுள் பக்தி, குரு பக்தி, பெற்றோர் பக்தியுடையராய்க் காணப்பட்டாரன்றியும், மன்னுயிர் யாவையும், தன்னுயிர் போல் பாதுகாக்கும் சிறந்த குணமுடையவராகவும் காணப்பட்டார். ஆங்கிலக் கல்வியின் உயர்வைத் தந்தையாராயினும் தாயாராயினும் பொருட்படுத்தா தினால் நான்காவது வகுப்பு வரையிலும் ஆங்கிலங் கற்று வருகையில் தந்தை தாயார், ஜெனனதேசம் போக வேண்டியிருந்தமையால், சுப்பய்யா அவர் களும் 1894-ம் வரும் அவர்களுடன் சென்றனர். அங்கும் காலத்தை வீணாய்க் கழிக்கவில்லை. சிற்பம், சித்திரம், வைத்தியம், சோதிடம் முதலிய வியங்களில் கவனஞ் செலுத்தவராயினர். இவரின் நுண்ணிய அறிவி னாலும், கையாண்ட வேறு வேலைகளினாலும் இவர் அறிவு வளர்பிறைச் சந்திரன் போல் வளர்ந்தது.
மகாத்மா சதாநந்த சாமியவர்களின் அருள் கிடைக்கப் பெற்றமையால், ஆத்மார்த்தமான உபதேசங்களையும், சில அபூர்வ மான வைத்திய முறைகளையும் கற்று, அவரின் ஆசீர்வாதத்தால் ஸ்ரீமதி அஞ்சலையம்மாளை மணக்கிழத்தியாகக் கொண்டு சதிபதிகளிருவம் 1901-ம் வரும் சிங்கப்பூர் வந்தனர். வந்த சில தினங்களின் பின் அரசாங்கப் பதார்த்த பரிசீலனப் பகுதியிலும், சிப்பாய் கோல்பந்து விளையாட்டுப் பகுதியிலும் திருப்பதியாய் வேலை செய்த பின் சொந்த வேலைகளில் ஈடுபட்டு சித்திரம் சித்தரிப்பதிலும், சில்லறை கட்டிட வேலைகள் ஒப்பந்தத்திலும் இன்னோரன்ன பல வேலைகளிலும் சீவியம் நடத்தி வந்தனர். இவ்வாறான வியங்களிலும் பரோபகாரமான குணத்தினாலும், பிறர்மேல் வைத்த அன்பினாலும், இவர் பெயர் நம் மக்களுள் மாத்திரமன்றிப் பிறர் மக்களுள்ளும் பிரக்கியாதி பெற்றது. தேடிய திரவியங்களும் வளரத்துவங்கின. தனலட்சுமியும் கண்ணோக்கினள். இவ்வாறான நிலைமை எய்திய பின்னர் சிராங்கூன் ரோட்,251- நி. இல்லத்தில் சித்த வைத்திய பாற்மேசி எனும் காந்தரசக் கம்பெனியை ஸ்தாபகஞ் செய்து வைத்தியம் நடத்தினர். இவரின் கையால் மண்ணைக் கொடுத்தாலும் பொன் போன்ற மருந்தானது. ஆகையினால் இவருடைய வைத்திய நிலைமை மலாய் நாடுகளில் எவ்வளவு தூரம் எட்டுமோ, எத்தனை சந்து பொந்துகள் நுழையுமோ, அத்தனை இடங்களுக்கு எட்டியும், நுழைந்தும் வேலை செய்தமையால் அயல் நாடுகளெங்கணும் பரவத் துவங்கியது.
இவருடைய அதிர்ஷ்டத்தோடு குணமும் மனமும் கூடிக் கொண்டன. கைபாகம் செய்பாகமும் முறை தவறாமல் நிறைவேறியது. தமது வைத்திய சாலையை மென்மேலும் விருத்தியாக்குவதற்கு நினைத்துத் தனிக் கட்டிடங்களாகச் சொந்தத்தில் மேல் கண்ட சிராங்கூன் ரோட், 233, 235-நிம்பர்களில் மிகவும் விமர்சையாய் நடத்தி வருகின்றார். தனத்துக்கேற்ற குணம்போல் இம்மலாய் நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி பொதுஜன நன்மையின் பொருட்டு எத்தனையோ வியங்கள் புரிந்திருக்கின்றன. அவைகளியவையுங் கூற நமது சரித்திரமிடங்கொடாததினால், சிலதை மாத்திரம் இங்கு குறிப்பிடு கின்றோம். சிங்கை விவேகானந்த சங்கம், ஆதித்திராவிட சங்கம், முதலிய சங்கங்களின ஸ்தாபகராயும், சில சங்கங்களின் அங்கத்தவராயும், எவரும் விரும்பத்தக்கவாறு தொண்டு புரிந்திருக்கின்றார்.
1932-ல் சில நன்மக்கள் முயற்சியால் ஸ்தாபகஞ் செய்யப்பட்ட, சீர்திருத்தச் சங்கத்திற்கு சங்கங்களின் அபிமானமும், பேரன்பும் காரணமாக 1000 அங்கத்தவர்களுக்கு மேற்கொண்ட மேற்படி சங்கத்திற்குச் சபாநாயகராய் தெரிவு செய்யப்பட்டு தமது தொண்டை அங்கத்தினர் முழுத்திருப்திக்கும் ஏற்ற வாறு தொண்டு நடத்துகின்றார். இவருடைய தவவே உருப் போல் விளங்கும் இரண்டு ஆண் மக்களும், ஒரே பெண் மக்களும் போதிய பேரன் பேத்தி மார்களும் உண்டு. இவர் ஓர் மிக பேரன்பிமானி யன்பது பலர் அபிப் பிராயம். எல்லாம் வல்ல இறைவன் இன்னும் பொதுத்தொண்டில் ஈடுபட அருள் புரிவா வாராக. (Glorious Malaya in Tamil by Mr. S. Muthusamy Pillay,1937)
No comments:
Post a Comment